dhanush-gutham

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் தனுஷ் இரண்டு விதமான கெட்டப்பில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்தப் படத்தில் தனுஷுக்கு வில்லனாக இயக்குநர் கெளதம் மேனனே நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. பொதுவாகவே கெளதம் மேனன் படங்கள் என்றால் ஹீரோக்களை போன்றே வில்லன்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும்.

காக்க காக்க ஜீவன், என்னை அறிந்தால் அருண் விஜய், வேட்டையாடு விளையாடு டேனியல் என உதாரணங்கள் பல வில்லன்களை கூறலாம். அந்த வகையில் இந்தப் படத்திலும் வில்லனாக நடிக்க பல நடிகர்களை சந்தித்து வந்தார் கெளதம் மேனன். எஸ்.ஜே.சூர்யாவை கூட சந்தித்து பேசினார்.

ஆனாலும் யாரும் கெளதம் மேனன் எதிர்பார்த்தது போல அமையவில்லையாம். இதனால் கெளதம் மேனனே வில்லனாக நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதை மறுத்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன். இது தொடர்பாக ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என கௌதம் கூறியுள்ளார். இது ஒருபுறமிருக்க இந்தப் படத்தில் தனுஷுக்கு வில்லனாக தனுஷே நடிப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

Comments

comments