Surya-ranjith

இரண்டே படங்கள் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் பா.ரஞ்சித். துவண்டு கிடந்த கார்த்தியின் மார்கெட்டை ‘மெட்ராஸ்’ படம் மூலம் தூக்கி நிறுத்தனர். ‘மெட்ராஸ்’ படத்தின் எதார்த்தமான கதையும், அதன் வெற்றியும் தான் ரஞ்சித்தை ரஜினிகாந்திடம் கொண்டு போய்ச் சேர்த்தது.

இந்தக் கூட்டணியில் உருவாகிவரும் ‘கபாலி’ படத்தை தான் இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறது. இந்தப் படம் வெளிவந்த பிறகு இயக்குநர் ரஞ்சித் ஸ்டார் இயக்குநர்களின் பட்டியலில் நிச்சயம் சேர்ந்துவிடுவார் என்பது உண்மை.

இந்த நிலையில் இவர் அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ‘அட்டகத்தி’ படம் வெளியான போது அதை வெளியிட்ட ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்காக இரண்டு படங்களை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார் ரஞ்சித்.

அதில் ஒன்றுதான் ‘மெட்ராஸ்’. இன்னொரு படம் தான் சூர்யாவை வைத்து இயக்குவதாக இருந்தது. அதற்குள் ரஜினிகாந்த் ரஞ்சித்தை அழைத்ததால் அதற்குப் பின் தங்களது தயாரிப்பில் படம் பண்ண வேண்டும் என்ற தாராள மனதுடன் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் விட்டுக் கொடுத்தது.

அதன்படி ‘கபாலி’ வெளியீட்டிற்குப் பின் சூர்யா நடிக்கும் படத்தைத்தான் பா.ரஞ்சித் இயக்க உள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்த தகவல் வந்துள்ளது. மேலும் ’24’ படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை என்பதால் பா.ரஞ்சித்திடம் தனக்கு திருப்புமுனையைத் தரும்படியான கதையை எழுதுமாறு சூர்யா கேட்டுக் கொண்டுள்ளாராம்.

Comments

comments