NTLRG_160514154951000000

பிரபாஸ், ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்த வரலாற்று திரைப்படம் பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து சரித்திர வெற்றி பெற்றது. வசூலிலும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பில் படக்குழு தற்போது ஈடுபட்டு வருகின்றது. சீனாவில் இப்படம் ஜூன் 24 ஆம் தேதி பிரம்மாண்டமாக திரைக்கு வரவுள்ளது. எடிட்டர் வின்சன்ட் ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்ப இப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். 20 நிமிட காட்சிகள் கத்தரிக்கப்பட்டுள்ளதாம். சீனாவில் மட்டும் 6000 திரையரங்குகளில் பாகுபலி படம் திரைக்கு வரவுள்ளது.

 

Comments

comments