Vijay-Suriya-1

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘தெறி’ படம் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனையை படைத்தது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வசூலை குவித்தது. இந்த நிலையில் விஜய்யின் ‘தெறி’ பட வசூலை முறியடித்துள்ளதாம் ’24’ படம். ஆனால் இங்கு இல்லை அமெரிக்காவில்.

சூர்யா, சமந்தா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ’24’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சூர்யாவின் வில்லத்தனம், சரண்யா பொன்வண்ணனின் பாசம், திருவின் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஆகியவை படத்திற்கு பெரிதும் பலம் சேர்த்துள்ளன. இந்நிலையில் யுஎஸ் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் விஜய்யின் ‘தெறி’ சதனையை முறியடித்திருக்கிறது சூர்யாவின் ’24’ படம்.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் 270க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான ’24’ படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் சேர்த்து மொத்தமாக $462,852 டாலர்களை வசூல் செய்துள்ளது. சூர்யாவின் படமொன்று வெளிநாடுகளில் இவ்வளவு வசூல் செய்வது இதுவே முதல்முறை. இதற்கு முன் ‘தெறி’ படம் யு.எஸ் பாக்ஸ் ஆபீஸில் $440,000 டாலர்களை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை தற்போது சூர்யாவின் ’24’ படம் முறியடித்திருக்கிறது.

Comments

comments