Siva-Karthikeyan-and-Soori-in-a-still-from-the-Tamil-movie-Kedi-Billa-Killadi-Ranga

‘ரஜினி முருகன்’ படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘ரெமோ’. பாக்யராஜ் கண்ணன் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ஆர்.டி.ராஜா தனது 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் சூரிக்கு பதிலாக சதீஷ் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் – சூரியின் காமெடி நன்றாக பேசப்பட்டது. அப்படியிருக்க ‘ரெமோ’ படத்தில் சூரி ஏன் நடிக்கவில்லை என்று சிவகார்த்திகேயனிடம் கேட்டப்போது, சூரி அண்ணனை மிஸ் பண்ணியது எனக்கு வருத்தம்தான்.

ஆனால், அவர் பெரிய காமெடியன். அவருக்கு தீனிபோடும் அளவுக்கு இந்த ரெமோவில் போதுமான காமெடி இல்லை. அதனால்தான் அவர் நடிக்கவில்லை. என்றாலும், பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தில் மீண்டும் சூரி அண்ணனுடன் இணையவிருக்கிறேன் என்றார்.

Comments

comments