kabali-movie

மே 1ஆம் தேதி வெளியான கபாலி டீஸர் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் செய்ய முடியாத அளவுக்கு 15 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது கபாலி டீஸர். தமிழ்ப் படம், தென்னிந்தியப் படம், இந்தியப் படம் என்ற லெவலையும் தாண்டி, உலகளவில் ஹாலிவுட் படங்களின் சாதனையையும் முறியடித்துக் கொண்டிருக்கிறது கபாலி படம். வெளியான 7 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதுதான் இந்திய சினிமாவை மட்டுமல்ல… ஹாலிவுட் சினிமாவையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எந்த புரமோஷனும், விளம்பரமும் இல்லாமல், ஒரு தமிழ் படம் உலகளவில், வெளிநாட்டு விமர்சகர்களால் வியந்து பேசப்படுகிறது என்றால் அது கபாலிதான். உலகளவில் அதிக லைக்ஸ்கள் வெற்ற மூன்றாவது படமாக ஒரு பிராந்திய மொழிப் படத்தின் டீஸர் திகழ்கிறதென்றால் அது தமிழ்ப் படமான கபாலியின் டீஸர்தான்.

அதேபோல் இந்திய அளவில் அதிக பார்வைகள் கொண்ட, அதுவும் இத்தனை சீக்கிரம் இவ்வளவு பார்வைகள் பெற்ற முதல் படமும் கபாலிதான். இந்த சாதனைகளை ரஜினி ரசிகர்கள் மாவட்ட வாரியாக கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் ஆல்பட் தியேட்டரில் நேற்று ஏராளமான ரசிகர்கள் கேக் வெட்டி கபாலி டீஸரைக் கொண்டாடினர். இதே போல நெல்லை, திருச்சி, மதுரையில் உள்ள ரசிகர்களும் இனிப்பு வழங்கி, கபாலி டீஸரின் 15 மில்லியன் சாதனையைக் கொண்டாடினர்.

“டீஸரே இப்படினா அப்போ டிரைலர்”

Comments

comments