vijay-samantha

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சமந்தா. அதன் பிறகு அவர் தனி கதாநாயகியாக தமிழில் நடித்த ‘பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம்’ போன்ற படங்கள் அவருக்கு வெற்றி படமாக அமையவில்லை.

ஆனால் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். இருந்தாலும் சென்னையைச் சேர்ந்த சமந்தாவுக்கு தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்து வந்ததது. அவர் நம்பிய ‘அஞ்சான்’ படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும் ‘கத்தி’ படம் தமிழில் அவரை தூக்கி நிறுத்தியது. அதோடு, தமிழில் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரித்தது. அதனால் தெலுங்கு படங்களை குறைத்து விட்டு தமிழில் கூடுதல் கவனம் செலுத்தினார் சமந்தா.

ஆனால், அதையடுத்து நடித்த பத்து எண்றதுக்குள்ள, தங்கமகன் படங்கள் சமந்தாவுக்கு அடுத்தடுத்து தோல்விகளாக அமைந்தபோதும், மீண்டும் விஜய்யுடன் நடித்த ‘தெறி’ அவருக்கு ஹிட்டாக அமைந்தது. அதன்பிறகு சூர்யாவுடன் நடித்த ’24’ பெரிதாக கைகொடுக்க வில்லை.

இதனால் விஜய்யுடன் நடிக்கும் படங்கள் தனக்கு வெற்றி படமாக அமைவதால் அவருடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் சமந்தா. விஜய்யின் 60-வது படத்தில் தனக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் அதற்கடுத்து அவர் நடிக்கும் படத்தில் மீண்டும் நடித்து விட வேண்டும் என்பதில் சமந்தா தீவிரமாக இருக்கிறாராம்.

“சமந்தாவின் ஆசை… தளபதி காதில் விழுமா?”

Comments

comments