00-feature-49

சிவகார்த்திகேயன் நடிப்பில் விறுவிறுபாக உருவாகிவரும் படம் ரெமோ. பாக்யராஜ் கண்ணன் இயக்கிவரும் இப்படத்தை சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ஆர்.டி.ராஜா தனது 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகிவரும் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதில் ஒன்று தான் அவ்வை சண்முகியில் கமல் நடித்ததுபோன்று பெண் வேடம். இந்த வேடம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறாராம் சிவகார்த்திகேயன். இப்போது விஷயம் அதுவல்ல…

சிவகார்த்திகேயன் நடிகர் மட்டமல்ல… ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் கமலை போன்றே அவரும் பெண் குரலில் டப்பிங் பேசவுள்ளாராம். இதற்கு முன் அவ்வை சண்முகி படத்தில் கமல்ஹாசன் மட்டுமே தான் பெண் வேடத்தில் நடித்ததோடு மட்டமில்லாமல் பெண்குரலில் டப்பிங்கும் பேசினார். தற்போது அவரை தொடர்ந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் மட்டுமே அதை செய்யவுள்ளார்.

Comments

comments