00-feature-49

கபாலி டீசர் மே 1 ம் தேதி வெளியான நாளிலிருந்தே தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது. தற்போது இந்தியாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என்ற புதிய சாதனையைப் புரிந்திருக்கிறது. இதுவரை ஆமீர் கான் நடித்த தூம் 3 டீசரும், சல்மான் கான் நடித்த சுல்தான் டீசரும் தான் அதிகம் பேர் பார்த்த டீசராக இருந்தது.

தூம் 3 டீசரை இதுவரை 1 கோடியே 70 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், சுல்தான் டீசரை 1 கோடியே 71 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் பார்த்துள்ளனர். ஆனால், கபாலி டீசரை இதுவரை 1 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். கபாலி டீசர் மிகக் குறைந்த நாட்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்ல கபாலி டீசர் இன்னம் கொஞ்ச நேரத்தில் 4 லட்சம் லைக்குகளைக் கடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அதிக லைக்குகள் மற்றும் அதிக பார்வையாளர்கள் ஆகியவற்றைப் பெற்ற ஒரே டீசராக கபாலி டீசர் மகத்தான சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

Comments

comments