bobby-simha-prakash-raj

கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் சாதனை படைத்த படம் ‘கோ’. இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘கோ 2′ படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இதில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். சரத் இயக்கியிருக்கும் இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.

முதல் பாகத்தில் இருந்து இந்த இரண்டாம் பாகம் முற்றிலும் மாறுப்பட்டது. மீடியா மற்றும் அரசியல் களத்தில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய கதையை கோ 2-ல் சொல்லியிருக்கிறார்களாம். ஏற்கனவே படத்தின் டிரைலரில் அரசியல் வசனங்கள் தெறிக்கின்றன. தற்போது, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், ‘கோ 2′ குறித்த எதிர்ப்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது.

இந்த நிலையில் மே 16 ல் ஓட்டுப் போட்டால் 2 டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என புதுமையான முறையில் இப்படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர் ‘கோ 2′ படக்குழுவினர். அதாவது, தேர்தலில் ஓட்டுப்போட்டவர்கள் விரல் மையுடன் ஒரு செல்பி எடுத்து அதை 8682888038 என்ற எண்ணுக்கு தங்களது முகவரியுடன் அனுப்ப வேண்டுமாம்.

அப்படி அனுப்புபவர்களில் 500 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கோ-2 படத்திற்கான 2 டிக்கெட் இலவசமாக வழங்கப்பட உள்ளதாம். தேர்தலில் அனைவரையும் வாக்களிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பை கோ-2 படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.

Comments

comments