00-feature-60

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிஜாக்ஸன், அக்‌ஷய் குமார் நடிப்பில் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது 2.0 படம். இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் உருவாகிவருவதாக கூறப்படும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. பணம், லொகேஷன்கள் என எதிலும் சமரசமில்லாமல், ஷங்கர் கேட்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது லைக்கா நிறுவனம்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பெரிய நடிகர்களை அணுகினார் ஷங்கர். ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதலும் பெற்ற நிலையில், சம்பளம், அர்னால்ட் போட்ட கடும் நிபந்தனைகள் காரணமாக பின்வாங்கிய ஷங்கர் அடுத்து கமல் ஹாசனைத் அணுகினார். கமலும் கதை கேட்டுவிட்டு சில நாட்கள் கழித்து நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். பின்னர்தான் அந்த வேடத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பதாக ஒப்பந்தமாகி தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

சரி.. ஏன் கமல் நடிக்கவில்லை…? வில்லன் என்பதால் மறுத்துவிட்டாரா? என்ற கேள்வி எழுகிறதல்லவா..? அதற்கு கமல் ஹாசன் அளித்துள்ள பதில் இது: வில்லன் வேடம் என்பதால் மறுக்கவில்லை. ரஜினிக்கும் எனக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தம் காரணமாகவே நான் நடிக்கவில்லை.

நாங்கள் இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்தவர்கள்தான். நான் ஹீரோ, அவர் வில்லன்… அல்லது அவர் ஹீரோ, நான் கெஸ்ட் ரோல் என்று நடித்தவர்கள்தான். ஆனால் ‘மீண்டும் நாங்கள் இணைந்து நடிப்பதாக இருந்தால் அந்த படத்தை எங்களில் ஒருவர் தான் தயாரிக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்திருந்தோம், அதன் காரணமாகவே நடிக்க மறுத்தேன்’.

Comments

comments