Idhu-Namma-Aalu-Stills-032-740x431

தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையைக் கையில் எடுத்து வெற்றி கண்டு வரும் இயக்குநர் பாண்டிராஜ்.

இவரது படங்களுக்கு  ரசிகர்கள் மத்தியில் எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கும்.

திரைப்பட வியாபாரிகள் தரப்பிலும், பாண்டிராஜ் இயக்கிய படங்களுக்கு வணிக ரீதியான  வரவேற்பு எப்போதும் உண்டு.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு – நயன்தாரா நடிப்பில்  ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் மே 27 ஆம் தேதி வெளிவருகிறது.

கடந்த சில வருடங்களாகவே சிம்பு நடித்த படம் என்றால் தியேட்டரில் ஓடாது தியேட்டரைவிட்டு ஓடும் என்பதே யதார்த்த நிலவரமாக இருக்கிறது.

இது நம்ம ஆளு எப்படி?

பாண்டிராஜிடம் கேட்டால் சிம்பு ஹீரோ என்பதை மறந்து இது நம்ம ஆளு படத்தைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார்…

“மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் காதலை சந்தித்திருப்பார்கள். அந்த காதலை மைய கருத்தாக கொண்டு நான் இயக்கியுள்ள திரைப்படம்தான் இது நம்ம ஆளு.

ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் தம்பதியர்களின் காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எனக்குள் வெகு நாட்களாக இருந்து வந்தது.
எனது அந்த தேடலின் முயற்சிதான் இந்த  படம்.

படப்பிடிப்பில் சிம்பு – நயன்தாராவிற்கு நான் காதல் காட்சிகளை சொல்லி தர வேண்டும் என்ற அவசியமே இல்லை.

அவர்கள் இருவரின் சிரிப்பு, காதல் பார்வை, செல்ல கோபம் என அனைத்தும் படத்தின் லவ் கெமிஸ்டிரிக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் சிம்பு – நயன்தாராவின் காதல் காட்சிகள் யாவும் நடிப்பு போலவே இல்லை.

பத்து வருடத்திற்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த படம், எது மாதிரியும் இல்லாம, புது மாதிரியும் இல்லாம, ஒரு மாதிரியா இருக்கும்” என்று  சொல்கிறார்  இயக்குநர் பாண்டிராஜ்.

50 சதவீத காமெடி மற்றும் 50 சதவீத காதல்  என்ற ஃபார்முலாவில் உருவாகி இருக்கும் இது நம்ம ஆளு படத்தில்  சிம்பு – சூரி என புதிய காமெடி கூட்டணியை அமைத்திருக்கிறாராம்.

“இதுவரை சிம்பு – சந்தானம் கூட்டணியில்  உருவான காமெடி காட்சிகள் அனைத்தும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து, அவர்களிடம் பெரும் வரவேற்பை  பெற்றவை. அதே போல் இந்த படத்தில் சிம்புவுடன் புதிதாக இணையும்  சூரியின் காமெடியும், ரசிகர்களின் கைதட்டல்களுக்கு காரணமாக அமையும்.  சிறப்பு தோற்றமாக சந்தானம் மூன்று சீன்களில் நடித்திருக்கிறார்.

குறைந்தது 100 தடவையாது ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு. இது நம்ம ஆளு திரைப்படம் மூலம் நிஜமாகப்போகிறது”
என்கிறார் படத்தின் பாண்டிராஜ்.

Comments

comments