NTLRG_160524105721000000

சூர்யா, சமந்தா நடித்து வெளிவந்த ’24’ படம் தமிழில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இருந்தது. ஆனால், இதே போன்ற டைம் மிஷின் கதை கொண்ட ‘இன்று நேற்று நாளை’ நகைச்சுவையுடனும், ரசிக்கும்படியாகவும் ஏற்கெனவே வந்தது ’24’ படத்திற்கு வில்லனாக அமைந்துவிட்டது. அந்தப் படத்துடன் ’24’ படத்தை ஒப்பிட்டுப் பார்த்து கருத்துக்கள் வெளிவர ’24’ பெரிய அளவில் ரசிகர்களைக் கவராமல் போய்விட்டது. ஆனால், தமிழில் ஏமாற்றினாலும் தெலுங்கில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.

அது மட்டுமல்ல இந்தப் படம் அமெரிக்காவில் சுமார் 11 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதுவரை சூர்யா நடித்து வெளிவந்த படங்களிலேயே அமெரிக்காவில் அதிக வசூலை அள்ளிய படம் என்ற பெருமையையும் பெற்றது. ‘தெறி’ படத்திற்குப் பிறகு ’24’ படமும் அமெரிக்காவில் நல்ல வசூலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மாதம் ஒரு தமிழ்ப் படமாவது அமெரிக்காவில் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. அடுத்து ‘கபாலி’ படம் அந்த வசூலை எல்லாம் தாண்டப் போவது உறுதி. அதற்குள் வேறு எந்தப் படமாவது இந்த சாதனையைப் புரியுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 

Comments

comments