IMG-20160502-WA0003

காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை கடந்த சில வருடங்களாக காயடித்துவிட்டனர் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள்.

அஜித்குமார் பிறந்த தினமான மே 1 ஆம் தேதியை ‘தல பிறந்த தினமாக’ கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் வந்த பிறகு, அஜித்குமாரின் பிறந்தநாளை தேசத்தலைவரின் பிறந்த தினத்தைப்போல் அமர்க்களப்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

மே 1 அன்று சமூகவலைத்தளங்கள் பக்கமே போக முடியாத அளவுக்கு வார்த்தை குப்பைகள் அங்கே கொட்டப்படுகின்றன.

அஜித்தைப் பாராட்டிப் புகழ்கிற பெயரில் தங்களையே கேவலப்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த வருடமும் இப்படித்தான் துவங்கியது அஜித்குமாரின் பிறந்த தினம்.

வழக்கமாக அஜித் பிறந்தநாளை ட்விட்டரில் டிரெண்டிங்கில் கொண்டு வருவார்கள் அஜித் ரசிகர்கள்.

இந்த வருடம், அஜித்தின் பிறந்தநாள் அமர்க்களத்தை காலி பண்ணிவிட்டது – கபாலி.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு ரஜினியின் கபாலி படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.

என முழுக்க முழுக்க கபாலி படத்தின் டீஸர் குறித்த ஹேஸ்டேக்குகளே டிரெண்டிங்கில் இடம்பிடித்திருந்தது.
இந்த கொண்டாட்டத்தில் அஜித் பிறந்த நாள் அமுங்கிப்போனது.

அஜித் பிறந்த நாள் குறித்த ஹேஷ்டேக் சில நிமிடங்களே தென்பட்டன.

கபாலி டீஸரோ நேரம் செல்ல செல்ல சாதனை படைக்கத் தொடங்கியது.

ஒரு மணி நேரத்தில் கபாலி டீசரை 10 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர்.

இரண்டு மணி நேரத்தில் 1.20 லட்சம் லைக்குகள் கிடைத்தன.

கபாலி டீஸர் வெளியான ஏழு மணி நேரத்தில் 1,619,877 பேர் பார்த்து ரசித்திருப்பதோடு, 1,71,039 லைக்குள் கிடைத்திருக்கின்றன.

8520 பேர் கபாலி டீசரைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.

ஒரு நிமிடம் 6 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீஸரில் ரஜினிகாந்த் இரண்டு விதமான கெட்டப்புகளில் வருகிறார்.

”நெருப்புடா” என்று பின்னணி குரலில் ரஜினிகாந்த் ஸ்டைலாகப் பேசுகிற காட்சி ரஜினி ரசிகர்களை சந்தோஷப்படுத்தும்.

டீஸரில் வரும் ஒரு காட்சியில் ‘ஆமா.. நீங்க ஏன்ணே கேங்ஸ்டர் ஆனீங்க?’ என்று ஒருவர் கேட்க, அதற்கு தனக்கே உரிய பாணியில் புன்னகையை பதிலாகத் தருகிறார் ரஜினி.

இன்னொரு காட்சியில் ‘யார்றா அந்த கபாலி கூப்புட்றா அவனை’ என்று வில்லன் கிஷோர் கத்துகிறார்.

அடுத்த ஷாட்டில், “தமிழ்ப் படங்கள்ல மரு வச்சிக்கிட்டு மீசைய முறுக்கிக்கிக்கிட்டு லுங்கி கட்டிக்கிட்டு, நம்பியாரு ‘ஏ கபாலி’ அப்டீன்னு சொன்ன உடனே, குனிஞ்சி ‘சொல்லுங்க எஜமான்’னு வந்து நிப்பானே அந்த கபாலின்னு நினைச்சியா” என்று கேட்டு நிறுத்தி “கபாலிடா” என்று கம்பீரமாகச் சொல்கிறார் ரஜினி.

அடுத்த ஷாட்டில் தலைமுடியை கோதி விட்டு ஸ்டைலாக வருகிறார் ஸ்டார் ரஜினி.

நிறைவாக ‘மகிழ்ச்சி’ என்று புன்னகை செய்கிறார்.

மொத்தத்தில் ‘கபாலி’ படத்தின் டீஸர் அஜித்குமாரின் பிறந்தநாளை பிசுபிசுக்க வைத்துவிட்டது.உலகம் முழுக்க உள்ள கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்த ‘கபாலி’ படத்தின் டீஸர் யு டியூப்பில் வெளியானதும் ட்விட்டரில் ட்ரெண்ட்டிங்கில் இடம் பிடிக்க ஆரம்பித்தது.

#KabaliTeaser

#Magizhchi

#kabalida

#KabaliTamilMovie

#Thalaivar

#padhmavibhusan

#neruppuda

#மகிழ்ச்சி

Comments

comments