_cf875a3e-89e5-11e5-8873-614af01f27d5

கலைப்புலி தணுவின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில், விஜய் நடித்த ‘தெறி’தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் தெலுங்கில் ‘போலீஸோடு’ என்ற பெயரில் அதே நாளில் ரிலீஸாகிறது.

கேரளா, கர்நாடகா, இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கான பிசினஸை வெற்றிகரமாக முடித்துவிட்டார் தாணு. ‘தெறி’ படத்திற்கான பிசினஸ் முடிவடைந்து, தற்போது தியேட்டர்கள் புக் பண்ணும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 600 தியேட்டர்களில் தெறி படம் வெளியாகிறது. கேரளாவில் 200 தியேட்டர்கள் தெறி படத்துக்காக பிளாக் பண்ணி வைத்துள்ளனர்.

உலகம் முழுக்க 3000 தியேட்டர்களில் தெறி படத்தை வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. ‘தெறி’ படத்தை எந்த எந்த நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது என்ற விவரம் தற்போது கிடைத்திருக்கிறது. அதன்படி தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸை 8 பேர் பங்குபோட்டிருக்கின்றனர்.

1. சென்னை சிட்டி : சத்யம் சினிமாஸ்

2. செங்கல்பட்டு : சத்யம் சினிமாஸ்

3. கோயம்புத்தூர் : மோனிகா ஃபிலிம்ஸ்

4. திருச்சி, தஞ்சாவூர் : பிகே நாராயணசாமி

5. மதுரை, ராமநாதபுரம் : இயக்குனர் அமீரின் இம்பாலா தியேட்டர்ஸ்

6. சேலம் : 7ஜி சிவா

7. திருநெல்வேலி, கன்னியாகுமரி : மன்னன் ஃபிலிம்ஸ்

8. தென்ஆற்காடு : டாக்டர் ஆல்பர்ட்

9. வடஆற்காடு : அலங்கார் தியேட்டர் தேவராஜ்

கேரளாவில் தெறி படத்தை கார்னிவல் மோஷன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தெறி படத்தை போலிஸோடு என்ற பெயரில் தில் ராஜு வெளியிடுகிறார்.

கர்நாடகா மாநிலத்தில் சௌத் சைட் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தியாவின் பிற பகுதிகளுக்கான ரைட்ஸை ராஜ்பாய் வாங்கியிருக்கிறார்.

வெளிநாடுகளில் தெறி படத்தை வெளியிடுபவர்களியன் விவரம்..

1. வட அமெரிக்கா : சினிகேலக்ஸி யுஎஸ்

2. ஐரோப்பா, லண்டன், ஸ்ரீலங்கா : ஐங்கரன் இன்டர்நேஷனல்

3. சிங்கப்பூர், சவுதி அரேபியா : சஞ்சய் வத்வா

4. மலேசியா : மாலிக் ஸ்ட்ரீம் கார்பொரேஷன்

5. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து : எம்கேஎஸ் ரீடைல்

6. ஜப்பான் : செல்லுலாய்டு ஜப்பான்

 

Comments

comments