_88494665_dicaprio_award_2_afp_getty

தமிழ் சினிமாவில் ஒருகட்டத்தில் இயக்குனர்கள் ஹீரோக்களாகி வந்தனர். அதையடுத்து பாடலாசிரியர்கள் வந்தனர். இப்போது இசையமைப்பாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களை அடுத்து நடித்த பிச்சைக்காரன் மெகா ஹிட் படமானதால் இப்போது அவர் கமர்சியல் வட்டத்திற்குள் வந்து விட்டார். அவரைத் தெடர்ந்து ஜி.வி.பிரகாஷ் டார்லிங், திரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களைத் தொடர்ந்து அரை டஜன் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது விஷாலின் ஆம்பள படத்தில் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் தமிழா ஆதியும் சுந்தர்.சி தயாரிக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக அரிதாரம் பூசுகிறாராம். தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி என தொடர்ந்து இசையமைத்து வந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, தனிஒருவன் தெலுங்கு ரீமேக் உள்பட இரண்டு தமிழ்ப்படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார். மேலும், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் பாணியில் தான் நாயகனாக நடிக்கும் படத்திற்கும் தானே இசையமைக்கிறாராம் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

 

Comments

comments