00-feature-60

‘எந்திரன்’ படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.

ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன் நடிக்கும் 2.0 படத்தில் ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்கிறார்.

டெல்லியில் நடைபெற்ற 2.0 படப்பிடிப்பில் கலந்து கொண்ட அக்‌ஷய்குமாரின் கெட்டப் வாட்ஸ்அப்பில் வெளியானது.

அதை வைத்து 2.0 படத்தின் வில்லன் அவர்தான் என்ற யூகச்செய்திகள் வெளிவந்தன.

அதை எண்ணி கடுப்பாகி இருக்க வேண்டிய ஷங்கர், மாறாக நல்லவேளை… உண்மையை மீடியாக்கள் மோப்பம் பிடிக்கவில்லை என்று சந்தோஷத்தில் திளைத்தார்

காரணம்… 2.0 படத்தின் வில்லன் அக்‌ஷய்குமார் அல்ல என்பதுதான்.

இந்நிலையில், 2.0 படத்தின் வில்லனாக நடிப்பது நான் தான் என்றும், ‘எந்திரன்’ படத்தின் வில்லனாக நடித்த டானியின் மகனாக தான் நடித்திருப்பதாகவும் சுதன்ஷூ பாண்டே என்ற வில்லன் நடிகர் பேட்டி ஒன்றில் 2.0 பட ரகசியத்தைப் போட்டு உடைத்துவிட்டார்.

அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2’ படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்தவர் சுதன்ஷூ பாண்டே.

வில்லன் யார் என்ற தகவலை மட்டுமல்ல, கதையையும் சொல்லிவிட்டார்.

2.0 படத்தின் வில்லன் நான் தான் என்று அந்தப்பேட்டியில் தெரிவித்துள்ள சுதன்ஷூ பாண்டே, தான் உருவாக்கும் ரோபோ வேடத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

தனது படத்தின் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மீடியாவில் வராதபடி மிகவும் கவனமாக இருப்பார் ஷங்கர்.

அதையும் மீறி ஐ படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அந்தப்படத்தில் ஜிம்மிஜிப் ஆப்பரேட்டராக பணியாற்றிய ஒருவர் ஐ புகைப்படங்களை கசியிவிட்டு வந்தார்.

2.0 படத்தின் ரகசியத்தை அதில் நடிக்கும் நடிகரே வெளியே சொல்லி இருக்கிறார்.

சுதன்ஷூ பாண்டேவின் பேட்டியால் ‘2.0’ கதை ரகசியம் வெளிப்பட்டுவிட்டதால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர்.

Comments

comments