NTLRG_160416175203000000

தமிழ்நாட்டு அரசியலில் 1996ம் ஆண்டு ‘ரஜினி வாய்ஸ்’ என்பது பெரிதும் பேசப்பட்டு, திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கக் காரணமாக அமைந்தது. அப்போதே ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால், ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அதற்கடுத்து தேர்தல் நடக்கும் போது எல்லாம் ரஜினி யாருக்கு வாய்ஸ் கொடுப்பார் என்ற பேச்சு எழும். ஆனால், அவர் 96க்குப் பிறகு பெரிதாக எந்த வாய்ஸ்ம் கொடுக்கவில்லை. அதற்கு மேலும் ரஜினி அரசியலில் இறங்க மாட்டார் என்று அவருடைய ரசிகர்களே முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

இந்தத் தேர்தலில் மீண்டும் ரஜினிகாந்த் பற்றி யாருமே அதிகம் பேசாமல் இருந்தார்கள். ஆனால், நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் விஜயகாந்த், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி பேசியிருந்தார். அதில் அரசியலில் ரஜினியை போன்று நான் பின்வாங்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார். இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

பல இடங்களில் விஜயகாந்தைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில இடங்களில் விஜயகாந்தின் உருவ பொம்மை எரிக்கப்பட்டுள்ளன. அதோடு சமூக வலைத்தளங்களிலும் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ரஜினிகாந்தை விஜயகாந்த் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார் என ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ரஜினிகாந்தைப் பற்றி பேச விஜயகாந்துக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் சொல்கிறார்கள். இதற்கு ரஜினிகாந்த் ஏதாவது கருத்துத் தெரிவிப்பாரா அல்லது வழக்கம் போல அமைதி காப்பாரா என்பது தெரியவில்லை.

 

Comments

comments