0

வாலி, வில்லன், அட்டகாசம், அசல் என சில படங்களில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் அஜித். ஆனால் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்புக்கு மாறிய பிறகு அவர் சிங்கிள் கெட்டப்பிலேயே நடித்து வருகிறார். இந்தநிலையில், வேதாளம் படத்தை அடுத்து சிவாவின் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம் அஜித். அதில் ஒன்று வரலாற்று கேரக்டராம். அதாவது தெலுங்கில் வெளியான மகதீரா போன்று கடந்த காலம், நிகழ்காலம் என இரண்டு கால கட்டங்களில் நடிக்கும் கதையில் நடிக்கிறாராம் அஜித்.

ஆனால் இந்த செய்தி அஜித்தின் அடுத்த படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கும் விஷ்ணுவர்தனுக்கு பெரிய அதிர்ச்சி செய்தியாக அமைந்திருக்கிறது. காரணம், அவர் சோழர் காலத்து கதை ஒன்றை எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து அஜித்துக்காக ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து கொண்டிருக்கிறார். அது முழுக்க முழுக்க வரலாற்று கதை என்பதால், இந்த நேரத்தில் சிவா இயக்கும் படத்திலும் வரலாற்று கதையில் நடித்தால் தனது கதையில் உடனடியாக நடிக்க அஜித் தயங்க வாய்ப்பிருக்கிறதே என்கிற குழப்பத்தில் இருக்கிறாராம் விஷ்ணுவர்தன்.

 

Comments

comments