sasi-story_647_042116055041

நடிகர்களுக்கு வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.

இதற்கு மாறாக, இன்றைய நடிகர்களில் பலர் வெற்றி வந்தால் தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள்.

தோல்வி வந்தால் பதுங்கிக் கொள்கிறார்கள்.

இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் சசிகுமார்.

தாரை தப்பட்டை படத்துக்கு முன்பு வரை மீடியாக்களிடம் சகஜமாக பழகிவந்தவர், அப்படத்தின் படு தோல்விக்குப் பிறகு அப்படியே பம்மிவிட்டார்.

தாரை தப்பட்டை கிழிந்ததைப் பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதால் மீடியாக்கள் இருக்கும் இடத்துக்கு தப்பித்தவறிக்கூட வருவதில்லை.

சசிகுமார் நடித்த வெற்றிவேல் படம் இந்த வாம் வெளியாகிறது.

படத்தின் புரமோஷனுக்காக கூட மீடியாக்களை சந்திக்காமல் முடங்கிவிட்டார்.

வெற்றிவேல் படத்தின் செய்தியாளர் சந்திப்புக்கும் கூட சசிகுமார் வரவில்லை. மாறாக இயக்குநரை மட்டும் அனுப்பி வைத்தார்.

இதற்கிடையில், தெறி படத்தைப் பற்றி வெளியான நெகட்டிவ் டாக்கை நம்பி மோசம் போய்விட்டார் சசிகுமார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, சசிகுமார் நடித்த வெற்றிவேல் படம் முதலில் ஏப்ரல் 29 அன்றுதான் வெளியாவதாக இருந்தது.

தெறி படம் தேறாது என்று கிளப்பிவிடப்பட்ட தகவலை நம்பி வெற்றிவேல் படத்தின் ரிலீஸ் தேதியை, 29 ஆம் தேதியிலிருந்து ஒருவாரம் முன்னதாக 22 ஆம்தேதிக்கு மாற்றி வைத்தார் தயாரிப்பாளர்.

தெறி படம் வெளியான தியேட்டர்கள் எல்லாம் காலியாகி, தன்னுடைய படத்துக்குக் கிடைக்கும் என்று நம்பி, 22 ஆம் தேதிக்கு தியேட்டர்கள் புக் பண்ண இறங்கியவர்களுக்கு அதிர்ச்சி.

எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

பாலாவின் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘தாரை தப்பட்டை’ படம் ஏ, பி சி என மூன்று சென்டர்களிலும் மிகப்பெரிய தோல்வியடைந்தது.

அதனால் வெற்றிவேல் படத்துக்கு தியேட்டர்களைக் கொடுக்க தியேட்டர்காரர்கள் ஆர்வம் காட்டவில்லை.

மனிதன், களம் என சுமார் நான்கு படங்கள் 29 ஆம் தேதி அன்று வெளியாவதால் அனைவரும் முன் கூட்டியே தியேட்டர்களை புக் பண்ணிவிட்டனர்.

இந்தப் பிரச்சனை காரணமாக வெற்றிவேல் படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் 29 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கலாமா என யோசித்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

அதற்கு சசிகுமார ஒப்புக்கொள்ளவில்லையாம்.

எனவே வேறு வழியில்லாமல் 22 ஆம் தேதி அன்று வெற்றிவேல் படத்தை வெளியிட உள்ளன.

100க்கும் குறைவான தியேட்டர்களில் மட்டும் பெயரளவுக்கு மட்டுமே ரிலீஸ் ஆக இருக்கிறது வெற்றிவேல்.

Comments

comments