Kutraparambarai-Movie-Pooja-Movie-Launch-Stills-Set-2-022-740x431

‘குற்றப்பரம்பரை’ படத்தை மையமாக வைத்து இயக்குநர் பாரதிராஜாவுக்கும் இயக்குநர் பாலாவுக்கும் இடையிலான மோதல் இப்போதைக்கு முடியாது போலிருக்கிறது.

இந்தப் பஞ்சாயத்தினால் பாரதிராஜா குற்றப்பரம்பரை படம் வருமா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இப்படியொரு  சந்தேகம் ஏற்பட என்ன காரணம்?

குற்றப்பரம்பரை படத்தை பாரதிராஜாவே தயாரிப்பதுதான் சந்தேகத்துக்கு முதல் காரணம். ஏனெனில், தயாரிப்பாளர் பாரதிராஜாவை பற்றி படத்துறையில் உள்ளவர்களுக்கு முக்கியமாக தொழிலாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அதாவது பாரதிராஜாவிடம் சம்பளம், பேட்டா என்று கேட்காமல் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம்.

சம்பளம் என்று கேட்டுவிட்டால் போதும்… பாரதிராஜா பாராமுகராஜாவாகிவிடுவார். அது மட்டுமல்ல, சம்பளம் கேட்டவரை சண்டாளப்பாவி என்று அடிக்காத குறையாக வேலையைவிட்டு அனுப்பிவிடுவார். ஏறக்குறைய பாரதிராஜாவிடம் வேலை பார்த்த பலருக்கும் இந்த அனுபவம் நிச்சயம் இருக்கும்.

இப்படிப்பட்ட பாரதிராஜா பல கோடி செலவு செய்து குற்றப்பரம்பரை படத்தை எடுப்பாரா? எவனாவது ‘மாட்டினால்’ மட்டுமே இந்தப் படத்தை எடுப்பார்.

அப்படியே எடுத்தாலும் குற்றப்பரம்பரை படம் தியேட்டருக்கு வருவதற்கான வாய்ப்பு 99 சதவிகிதம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இந்திய தொலைக்காட்சியில் முதல்முறையாக என்று நேரடியாக டிவியில் வருவதற்கு 1 சதவிகித வாய்ப்பு உண்டு.

குற்றப்பரம்பரை படத்தின் தலைஎழுத்து இப்படியாக இருக்க அந்தப்படத்தை மையமாக வைத்து, பாரதிராஜா, ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதாசிரியர் ரத்னகுமார்  ஒரு பக்கமும், பாலா, அவர் இயக்க இருக்கும் புதிய படத்தின் கதாசிரியர் வேல.ராமமூர்த்தி மறுபக்கமும் நின்று மோதிக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த மோதலை மக்கள் எவ்வாறு பார்க்கின்றனர்?

“இது இருதரப்பு படைப்பாளிகளுக்கு இடையிலான மோதல் இல்லை என்றும், தேவர் சமூகத்துக்குள் இருக்கும் இரண்டு உட்பிரிவுகளுக்கு இடையிலான மோதல் என்றும், இரண்டு படைப்பாளிகளுக்கு இடையிலான மோதலாக முகமூடி அணிந்து கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர்” என்பதாகவே மக்களின் அபிப்ராயம் இருக்கிறது.

இதை உறுதிபடுத்துவதுபோல் உள்ளது சமூக ஆர்வலர் எவிடென்ஸ் கதிர் கூறியிருக்கும் தகவல்.

“பாரதிராஜா போன்ற ஒரு சாதி வன்மம் பிடித்த ஆளை சினிமாவில் பார்க்க முடியாது என்று கருதுகிறேன். ‘நான் தேவர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்’ என்கிறார்.

எப்படித்தான் இந்த இளையராஜா இத்தனை ஆண்டுகள் அவரோடு குப்பை கொட்டினார் என்றே தெரியவில்லை.

பாலாவுக்கும் பாரதிராஜாவுக்கும் என்ன பிரச்னை? வெறி சிம்பிள்.

தேவர் சமூகத்தில் குற்றப்பரம்பரை என்று ஒடுக்கப்பட்ட பிரிவு பிரமலை கள்ளர். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. ஆனால், பாலா தேவர் சமூகத்தில் வேறு பிரிவு.

இதை அடிப்படையாக கொண்டுதான் பாரதிராஜா வன்மம் கொள்ளுகிறார். ‘என் சாதி படத்தை நான்தான் எடுப்பேன். வேறு யாரும் எடுக்க கூடாது’ என்கிற சாதி பாசம்தான். வேறென்ன?

அது சரி பாரதிராஜா…! இந்த படத்தில் முதல் காட்சியில் கும்பிட்டபடி மேலே வரும் உங்கள் கைகளின்போது ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று குரல் வருமா? அல்லது ‘என் இனிய பிரமலை கள்ளர் சமூகத்து மக்களே’ என்று குரல் வருமா?”

பாரதிராஜா தலையில் ணங்கென்று குட்டி இருக்கிறார் எவிடென்ஸ் கதிர்.

Comments

comments