kutraparamabarai_fl002

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.மண் மணம் மாறாத பல கிராமத்து படங்களை கொடுத்த இவர் நீண்ட காலமாக எடுக்க விரும்பிய கனவு படம் குற்றப்பரம்பரை.

ஒரு காலத்தில் தென் தமிழகத்தில் திருட்டையே தொழிலாகக் கொண்டிருந்த குறிப்பிட்ட சமூகத்தை குற்றப்பரம்பரை என அப்போது பிரிட்டிஷ் அரசு வகைப்படுத்தியது. அதனால், அப்பகுதிகளிலுள்ள ஆண்கள் எல்லோரும் காவல்நிலையத்தில் வந்து கைரேகை வைத்து அங்கேயே தங்க வேண்டும். கல்யாணம் ஆன ஆணுக்கும் அதே நிலை தான்… என்ற கொடுமையான கைரேகை சட்டத்தை 1911ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்தது.

இதை எதிர்த்து மதுரை உசிலம்பட்டியை அடுத்துள்ள பெருங்காமநல்லூரில் போராட்டம் வெடித்தது. இதை அடக்க அப்போதைய பிரிட்டிஷ் அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை வைத்து குற்றப்பரம்பரை என்ற பெயரில் நாவல் எழுதப்பட்டது.

இப்படத்தை இயக்க பாரதிராஜா பலமுறை முயற்சித்த சூழ்நிலையில் இயக்குநர் பாலா இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனால் பாரதிராஜா, பாலா இடையே ஒரு பெரிய சண்டையே நடந்து வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் பாராதிராஜா இப்படத்தின் பர்ஸ்ட்லுக் ரிலிஸ் செய்துள்ளார். இது குற்றப்பரம்பரை அல்ல குற்றம் சுமத்தப்பட்ட பரம்பரை என்ற வரிகளுடன் இந்த பர்ஸ்ட் லுக் உள்ளது.

இன்று பாரதிராஜா தலைமையில் பாக்யராஜ், சுசீந்திரன், சீமான், ஆர்கே.செல்வமணி, முத்தையா, பொன்ராம், கெளதம் மேனன், உட்பட 50 திரைப்பட இயக்குநர்கள் பெருங்காமநல்லூருக்கு சென்று அங்கு உயிர் நீத்த 17 பேருக்கும் அஞ்சலி செலுத்துகின்றனர்.

அதன்பின்னர் இப்படத்திற்கான பூஜையும், படப்பிடிப்பும் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

kutraparamabarai_fl001

Comments

comments