nassar_starcricket001

நடிகர் சங்கத்தேர்தலில் நாசர், விஷால் அணி வெற்றி பெற்ற பின்பு பல அதிடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக நடிகர்களை ஒன்றிணைத்து கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த உள்ளனர்.

இதில் இளம் நடிகர், நடிகைகள் தவிர தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் சமீபத்தில் பத்மவிபூசன் பெற்ற ரஜினிகாந்த்துக்கு மக்கள் முன்னிலையில் நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர்.

Comments

comments