jai1-732x431 (1)jai1-732x431 (1)
அண்மையில் நடந்து முடிந்த நட்சத்திர கிரிக்கெட்டுக்கு அஜித் வரவில்லை என்பது மட்டுமே பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.

அவரது அல்ல கைகளாக இருக்கும் சிம்பு போன்ற நடிகர்களும் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு வரவில்லை என்பதை பலரும் கவனிக்கவில்லை.

அல்லது இவனெல்லாம் ஒரு ஆளு என்று பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அப்படி கண்டுகொள்ளாதவர்களில் நடிகர் ஜெய்யும் ஒருவர்.

திரையுலகில் இசையமைப்பாளர் தேவா சம்பாதித்த நற்பெயருக்கு எதிர்மறையானவர் ஜெய்.

சிம்பு, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, விடிவி கணேஷ் போன்ற கெட்ட சகவாசத்தினால் தன்னுடைய கேரியரை வீணடித்துக்கொண்டவர் ஜெய்.

அஜித்தைப் போலவே, தான் நடிக்கும் படத்தின் புரமோஷனுக்கு வராமல் தயாரிப்பாளர்களை புலம்ப வைத்தார்.

அதனாலேயே ஜெய்யை வைத்து படம் எடுக்க எந்தவொரு தயாரிப்பாளரும் முன் வரவில்லை.

எனவே படமில்லாமல் சும்மா இருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, ஜெய் பற்றி இன்னொரு குற்றச்சாட்டும் திரையுலகில் சொல்லப்படுகிறது.

என்ன குற்றச்சாட்டு?

கதாநாயகி உடனான காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்படும்போது மட்டும், சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுகிறாராம் ஜெய்.

அடடே.. நல்ல விஷயம்தானே?

வெயிட்.. மக்களே மேலே படிங்க.

தன்னுடைய வேலை முடிந்த பிறகும் கூட, கதாநாயகியின் வேலை முடிகிறவரை அங்கேயே காத்திருக்கும் ஜெய், படப்பிடிப்பு முடிவடைந்ததும் கதாநாயகியை தன்னுடைய காரில் அழைத்துச் சென்று அவர் தங்கி இருக்கும் ஹோட்டலில் ட்ராப் பண்ணுகிறாராம்.

அது மட்டுமல்ல, அவர்களை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் சென்று நடிகைகளுக்கு தேவையான டிரஸ், செருப்பு இத்யாதிகளை வாங்கிக் கொடுக்கிறாராம்.

இவை எல்லாவற்றையும்விட தரை லோக்கலாக இன்னொரு காரியமும் செய்து வருகிறார்.

தன்னுடன் நடிக்கும் நடிகைகளை ஏர்போர்ட்டில் ட்ராப் பண்ணும் வேலையையும் கூசாமல் செய்கிறாராம்.

ஹைதராபாத்தில் குடியிருக்கும் அஞ்சலி சென்னை வந்தாலும்…கேத்ரின் தெரசா சென்னைக்கு வந்தாலும், சுரபி டெல்லியிலிருந்து வந்தாலும் அவர்களை ஏர்போர்ட்டிலிருந்து பிக்கப் பண்ணுவதும், படப்பிடிப்பு முடிந்து ஊருக்குப்போகும்போது ட்ராப் பண்ணுவதும் ஜெய்தான்.

அடச்சீ… ஆண்குலத்துக்கே அவமானம்.

Comments

comments