00-feature-60

தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி தமிழ் தொலைக்காட்சிகளில் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன

தமிழ் புத்தாண்டு தினத்தை பிறந்தநாள் தினமாக கொண்டாடுகிறது சன் டிவி எனவே விஷால் நடித்த ஆம்பள, அஜீத் நடித்த வீரம், விஜய் நடித்த புலி என எந்த ரசிகர்களும் கோபித்துக்கொள்ளாத அளவிற்கு 3 படங்களை ஒளிபரப்புகிறது.

விஜய் டிவியில் கமல் ஹாசன் திரிஷா நடித்த தூங்காவனம் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

ராஜ் டிவியில் அச்சாரம், எட்டுத்திக்கும் மதயானை திரைப்படம் ஒளிபரப்பாகிறது. கூடவே மதுரை முத்து தலைமையில் காமெடி பட்டிமன்றம் நடைபெறுகிறது.

ஜீ தமிழ் டிவியில் சிவ கார்த்திக்கேயன் கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினிமுருகன் திரைப்படமும் தெறி, கோ 2 திரைப்படங்களின் சிறப்பு கண்ணோட்டமும் ஒளிபரப்பாகிறது.

எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்த டூரிங் டாக்கீஸ் திரைப்படம் மெகா டிவியில் ஒளிபரப்பாகிறது.

சன் லைப் டிவியில் ஏப்ரல் 14ம் தேதி மாயாபஜார் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதே போல கேடிவியில் அட்டகத்தியும், ஒளிபரப்பாக உள்ளது. இந்த படங்களையும் மிஸ் பண்ணாம பாருங்க.

Comments

comments