_cf875a3e-89e5-11e5-8873-614af01f27d5

இந்திய சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கும் நடிகை ஷீனா சோஹன்.

தனுஷின் தீவிர ரசிகையான இவர் ஓர் அனுபவம் மிகுந்த நாடக கலைஞர்.

“நான்  பாலிவுட் நடிகர் அனுபம்கெர் நடிப்புப் பள்ளியில் நடிப்பு பயின்றேன். அப்போது தான் தேசிய விருது பெற்ற இயக்குனர் ஜெயராஜ் மூலம் எனக்கு மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது” என்கிறார் நடிகை ஷீனா.

தற்போது பெங்காலி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் இவர், கதாநாயகி மட்டும்மில்லாது ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்குமாறு இருக்கும் அனைத்து காதாபாத்திரங்களிலும் நடிக்க தயார் என்கிறார்.

சமகால நடனம் மற்றும் வயலின் இசையில் கைத்தேர்ந்தவரான இவர் ஒரு தேசிய கராத்தே வீராங்கனை என்பது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

தனுஷின் நடிப்பால் வியந்துப்போய் நிற்கும் ஷீனா, “தனுஷ், தமிழ் சினிமாவில் மட்டுமில்லாது, பாலிவூட்டிலும் கலக்கி கொண்டிருக்கிறார். அவரது நடிப்பை பார்த்து நான் பலமுறை வியந்ததுண்டு.

தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் நுணுக்கம், தனுஷின் திறமை. இந்த காரணத்தினால் தான் அவருடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற எண்ணம் உருவானது”, என்கிறார் கொல்கத்தாவின் அழகு புயல் ஷீனா.

அது சரி.. ஷீனா சோஹன்  தனுஷ் உடன் எந்தப் படத்தில் நடிக்கிறார்.

நடிக்கவில்லை. அவருடன் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டுத்தான் இப்படி எல்லாம் பிட்டைப் போடுகிறார்.

பொழக்கத் தெரிஞ்ச நடிகைப்பா இவர். ஹீரோக்களின் பலவீனம் தெரிந்து பந்தைப் போடுகிறாரே…

Comments

comments