like-father-like-son-740x431

அறிமுக இயக்குநர் லட்சுமண் இயக்கத்தில், ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி வெற்றியடைந்த படம் ரோமியோ ஜூலியட்.

இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து ரோமியோ ஜூலியட் படத்தின் இயக்குநர் லட்சுமண் – ஜெயம் ரவி மீண்டும் இணைந்துள்ள படம் – போகன்.

ஜெயம்ரவி நடித்த தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த்சாமி இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் அதாவது ரவிக்கு அப்பாவாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் கதைப்படி, போகன் படத்தின் முதல் பாதியில் ஜெயம்ரவி ஹீரோவாக இருப்பாராம். அரவிந்த்சாமி வில்லனாக இருப்பாராம்.

இரண்டாம் பாதியிலோ அப்படியே உல்ட்டாவாகி…. அரவிந்த்சாமி ஹீரோவாகவும், ஜெயம் ரவி வில்லனாகவும் இருப்பார்களாம்.

குழப்பமாக இருக்கிறதா?

வேறு படத்தின் செய்திக்குப் போகலாம்.

சிவாஜிகணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமான நடிகர் துஷ்யந்தின் தயாரிப்பில் வளர்ந்து வரும் படம் – ‘மீன் குழம்பும் மண்பானையும்’.

இந்த படத்தில் பிரபு அப்பாவாக நடிக்கிறார்.

அவரது மகனாக நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிக்கிறார்.

போகன் படத்தில் அரவிந்த்சாமி எப்படியோ அதேபோல் இந்தப் படத்தில் பிரபுவின் கேரக்டர் இருக்குமாம்.

அந்தப் படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டர் எப்படியோ, அதைப்போலவே மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் காளிதாஸின் கேரக்டர் இருக்குமாம்.

எப்படி சாத்தியம்?

இந்தப் படத்தின் கதையும், ஜெயம்ரவி நடித்து வரும் போகன் படத்தின் கதையும் ஒரே கதை.

அதாவது ‘மீன் குழம்பும் மண்பானையும்’ மற்றும் ‘போகன்’ ஆகிய இரண்டு படங்களுமே லைக் ஃபாதர் லைக் சன் என்ற ஜப்பானிய படத்திலிருந்து திருடப்பட்ட கதை.

அப்பா மகன் இருவருக்கும் இடையில் நடக்கும் விபரீதமான மன மாற்றத்தைப் பற்றிய படம்தான் – லைக் ஃபாதர் லைக் சன்.

அதாவது, அப்பாவின் ஆத்மா மகனின் உடம்புக்குள் சென்றுவிடுவதால் அப்பாவைப்போல் நடக்க ஆரம்பித்தவிடுகிறான் மகன்.

அதே நேரம் மகனின் ஆத்மா அப்பாவின் உடம்புக்குள் சென்றுவிட அவரோ மகனைப்போல் ஆகிவிடுகிறார்.

இதனால் உண்டாகும் விபரீதங்கள் பற்றிய படம்தான் லைக் ஃபாதர் லைக் சன்.

2013 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தைத்தான் ‘மீன் குழம்பும் மண்பானையும்’ மற்றும் ‘போகன்’ படத்தின் இயக்குநர்கள் திருடி இருக்கிறார்கள்.

Comments

comments