dc-Cover-tnkmvn48jj2kjapj6vmfk7vup0-20160407065821.Medi
சன் டிவியில் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பான நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கான புரோமோக்களில் வடிவேலு தலை தெரிந்தது.
குறிப்பாக, நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்குகொள்ளும் அணிகளையும், அவற்றின் கேப்டன்களையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தன்னையும் அணியில் சேர்த்துக் கொள்ளச் சொல்லி அலப்பரையைக் கொடுத்தார் வடிவேலு.
கையில் கிரிக்கெட் பேட்டை வைத்துக் கொண்டு ஒவ்வொரு அணியின் கேப்டன்களிடமும் அவர் சான்ஸ் கேட்க, யாருமே அவரை ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
இப்படி ஒரு மொக்க காமெடியை செய்து சிரிக்க வைக்க முயற்சி செய்தார் வடிவேலு.
சரத்குமார், ராதாரவிக்கு எதிரான ஆளாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு, விஷால் அணியுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொண்ட வடிவேலு, நடிகர் சங்க நிகழ்ச்சிகள் எல்லாம் தலையைக் காட்டி உள்ளேன் அய்யா சொல்வார்.
அப்படிப்பட்ட வடிவேலு நேற்று நடந்த நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு வரவே இல்லை.
என்ன காரணம்?
நட்சத்திர கிரிக்கெட் அணியில் தன்னை சேர்த்துக் கொள்ளும்படி ஆரம்பத்தில் இருந்தே கேட்டாராம். வடிவேலுவின் கோரிக்கையை நடிகர் சங்க நிர்வாகிகள் நிராகரித்துவிட்டனர்.
அந்த கடுப்பில் இருந்த வடிவேலுவுக்கு, சூரிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மேலும் மண்டையைக் காய வைத்துவிட்டதாம்.
இந்த கடுப்பில்தான் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
இன்னொரு தகவலும் காதுக்கு வருகிறது…
வடிவேலுவின் மகன் சுப்பிரமணி ‘ஒரு மாதிரி’யான ஆள்.
அவருக்கு திருமணம் செய்து வைத்து மதுரையிலேயே குடி வைத்திருந்தார்.
திடீரென சென்னைக்குக் கிளம்பி வந்த சுப்பிரமணி, தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக்கொடு என்று கேட்டு ரணகளம் பண்ணிவிட்டாராம்.
மகனின் செயலால் அப்செட்டான வடிவேலு, அந்த மன வருத்தத்தை மறக்க ‘மருந்து’ சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டார் என்று சொல்கிறார்கள்.

Comments

comments