seeman-11-740x431

புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் பணத்தில்தான், சீமானின் நாம் தமிழர் கட்சி போன்ற ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள் இயங்குவதாக நீண்ட காலமாகவே ஒரு குற்றச்சாட்டு உண்டு.

அதை உண்மையாக்குவதுபோல் ஒரு செய்தி தற்போது நம் கவனத்துக்கு வந்திருக்கிறது.

பிரான்சிலிருந்து தமிழீழ மகன் நிசாந்தன் என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் நமக்கு வந்தது.

தமிழீழத்தின் மீதும், விடுதலை புலிகளின் மீதும், தமிழீழ மண்ணிண் விடுதலைக்காக உயிரை ஈகம் செய்த மாவீர்கள் மீதும் உண்மையான பற்றுள்ளவர்கள் தயவுசெய்து இந்தசெய்தியை படித்தவுடன், துரோக நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கலையெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– என்ற கோரிக்கையுடன் தொடங்குகிறது அந்த மின்னஞ்சல்.

பிரான்சில் தேசிய செயட்பட்டளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சீமானின் பாதுகாப்பு பணியில்!

பிரான்சில் கேணல் பருதி மீதான தாக்குதலை தொடுத்தவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர்கள் மீதும் செயட்பட்டளர்கள் மீதும் படுகொலை முயற்சி தாக்குதல்கள் தொடுத்த வன்முறையாளர்கள் இன்று தமிழகத்தில் சீமானின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டள்ளனர்.

யார் இவர்கள் சீமானுக்கு தெரியாதா? இவர்களை சீமானுக்கு நன்கு தெரியும்

மாவீரர் நாள் என்பது தமிழீழத் தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களை நினைவுகூரும் நாள் மட்டுமன்றி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது பங்கை ஒவ்வொரு தமிழரும் உறுதிசெய்து கொள்ளும் நாள்.

மாவீரர்களின் வழியில் தமிழீழக் கனவை நனவாக்குவதற்கு ஒவ்வொரு தமிழரும் உறுதியெடுத்துக் கொள்ளும் நாள்.

இதனை இல்லாதொழிக்கும் நோக்கத்துடனேயே 2009 க்கு பின்னர் போராளிகள் என்ற பெயரில் புலம் பெயர் மண்ணில் மாவீரர் நாளை இரண்டாக பிரித்து மக்கள் மத்தியில் குழப்பங்களை விளைவித்து பல்வேறு தேசவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள்.

மே 18 இனபடுகொலை நாளை கூட இரண்டாக பிரித்தவர்கள்.

இவர்கள் யார் என்று மக்களுக்கு தெரிந்து துக்கி வீசப்பட்டனர்.

அதுமட்டுமா கடந்த காலங்களில் பிரான்சில் தேசிய செயட்டபளர்கள் மீது படுகொலை தாக்குதலை தொடுத்தனர்.

இப் படத்தில் வட்டமிட்டு கட்டபட்டிருக்கும் நபர், பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மீதும் தேசிய செயற்பட்டளர்கள் மீதும் படுகொலை தாக்குதலை நடத்துவதற்கு முன் நின்று செயற்படுபவர். பெயர் ராஜேஷ் ( தன்னை பெண் போராளி என்று சொல்லி கொண்டு அசிங்கதனமான வார்த்தைகளில் பேசும் உமா என்ற பெண்ணின் கணவர்)

என்று பல அதிர்ச்சி தகவல்களை சொல்கிறது அந்த மின்னஞ்சல்.

இந்த தகவல்கள் உண்மையா?

சீமான் தன்னுடைய பாதுகாப்புக்காக பக்கத்தில் வைத்திருப்பவர் விடுதலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்தவரா? அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையா?

சீமான்தான் விளக்க வேண்டும்.

Comments

comments