NTLRG_160403124559000000

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடிக்க ‘கான்’ திரைப்படம் கடந்த வருடம் ஆரம்பமானது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் ‘கான்’ படம் கைவிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. அதை செல்வராகவனும் உறுதி செய்தார். தற்காலிகமாகத்தான் படம் நிறுத்தப்படுவதாகவும் அவர் பின்னர் தெரிவித்திருந்தார். அதன் பின் சிம்பு, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். தற்போது செல்வராகவனும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை எடுத்து முடித்துவிட்டார்.

இந்த நிலையில் ‘கான்’ படம் மீண்டும் ஆரம்பமாக வாய்ப்புள்ளதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார். “கான்’ படம் கைவிடப்பட்டது என்று நான் சொல்லவே இல்லை. மீண்டும் அனைவரும் இந்தப் படத்தில் வேலை செய்ய தயாராக இருக்கிறோம். சிம்பு கூட இரவு நேரங்களில் சரியாக வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். தவிர்க்க முடியாத சில பிரச்சனைகளால்தான் எங்களால் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. மீண்டும் ‘கான்’ படத்தை ஆரம்பிக்க நாங்கள் அனைவரும் ஆர்வமாகவே உள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

சிம்பு படம் என்றாலே தாமதம், பிரச்சனை என்ற ஒரு சூழல் உருவாகிவிட்டது. அது ‘கான்’ படத்தையும் பாதித்தது. இனியாவது, ‘கான்’ தொடருமா அல்லது கானல் நீராக ஆகுமோ என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Comments

comments