49168052

எதிரிக்கு எதிரி நண்பன் என்பது அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் நடக்கத்தான் செய்கிறது.

அதற்கு லேட்டஸ்ட் உதாரணம்… சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிப்பது.

‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா நடித்து வெற்றிபெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ பட நிறுவனம் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் ‘வீரசிவாஜி’ படத்தை தயாரித்து வருகிறது.

விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் ‘கத்திச்சண்டை’ என்ற படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தை சுராஜ் இயக்குகிறார்.

இப்படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார்.

கத்திச்சண்டை படத்தில் விஷாலுடன் நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.

ஏற்கனவே ‘திமிரு’ படத்தில் விஷால், வடிவேலு இருவரும் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இப்போதுதான் மீண்டும் இணைகின்றனர்.

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ஏற்கெனவே ‘தலைநகரம்’, ‘மருதமலை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் வடிவேலு.

அதன் பிறகு சுராஜ் இயக்கிய படிக்காதவன், மாப்பிள்ளை, அலக்ஸ்பாண்டியன், அப்பாடக்கர் போன்ற படங்களில் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
இந்நிலையில் ‘கத்திசண்டை’ படத்தில் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இதற்கு காரணம் என்ன?

சுந்தர்.சியின் சிஷ்யர்தான் சுராஜ். இருவருக்கும் சமீபகாலமாக சுமுகமான உறவு இல்லை.

ஏற்கனவே வடிவேலுவுக்கும் சுந்தர்.சிக்கும் ஆகாது. இதை தெரிந்து கொண்ட வடிவேலு சுராஜை அழைத்து அன்பு செலுத்த ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாகவே தான் இயக்கும் படத்தில் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் சுராஜ்.

இருவரும் சேர்ந்து சுந்தர் சி.யை வெறுப்பேத்துறாங்களாம்…

Comments

comments