vijay-theri

தெறி படம் தமிழகத்தில் பல திரையரங்குகளில் திரையிட மறுத்து வருகின்றனர். இதை நேற்று ஒரு தனியார் சேனல் உறுதிப்படுத்தும் விதமாக வெளிப்படையாகவே அறிவித்திருந்தது.

இவை என்ன என்று விசாரிக்கையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு ஒரு பிரமாண்ட தொகையை இப்படத்திற்கு விநியோகஸ்தர்களிடம் கூறியுள்ளாராம்.

ஆனால், இவர் கூறும் விலைக்கு யாரும் வாங்க முன் வரவில்லையாம், ஏனெனில் தற்போதுள்ள படங்கள் அனைத்தும் முதல் வார வசூல் மட்டுமே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றது.அந்த வகையில் தாணு கூறும் தொகைக்கு வாங்கினால் கிட்டத்தட்ட படம் 40 நாட்கள் குறைந்தது 80% கூட்டம் வந்தால் தான் லாபம் கிடைக்குமாம், இதன் காரணமாகவே பேச்சு வார்த்தை இன்றுவரை நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Comments

comments