00-feature-49

‘தெறி’ படத்தின் வெற்றியில் திக்குமுக்காடிப்போய் இருக்கிறார் ‘கலைப்புலி’ எஸ்.தாணு. தெறியைத் தொடர்ந்து தாணுவின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘கபாலி’. பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக, ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே நடிக்கிறார். மற்றும் தன்ஷிகா, கலையரசன், தினேஷ், கிஷோர், ஜான் விஜய் முதலானோர் நடிக்கும் இப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

கபாலி படத்திற்கு கடந்த சில நாட்களாக டப்பிங் பேசி வந்த ரஜினிகாந்த் தனது டப்பிங் வேலைகளை சில தினங்களுக்கு முடித்து விட்டார். தற்போது தன்ஷிகா டப்பிங் பேசி வருகிறார். கபாலி படத்தின் டீஸர் தயாராகிவிட்டது. விரைவில் இதை வெளியிட உள்ளார் ‘கபாலி’ பட இயக்குனர். அநேகமாக உழைப்பாளர் தினமான மே-1 ஆம் ‘கபாலி’யின் டீஸரை வெளியிட பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். காரணம்… அடிப்படையில் கம்யூனிச கொள்கை கொண்டவர் பா.ரஞ்சித். எனவே கபாலி டீசரை வெளியிட உழைப்பாளர் தினத்தை தேர்வு செய்துள்ளார் இயக்குநர்.

இதனிடையே மே-1ம் தேதி அஜித் பிறந்தநாளும் கூட… கண்டிப்பாக அன்றைய தினம் சமூகவலைதளங்களில் அஜித்தின் பிறந்தநாள் மற்றும் கபாலி பட டீசர் டிரெண்ட்டிங்கில் தெறிக்கப்போவது உறுதி. அதேசமயம் அஜித் பிறந்த நாள் அன்று கபாலி டீசர் வெளிவருவதாக அஜித்தின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கூவாமல் இருக்கணும்…?

 

Comments

comments