00-feature-49

முன்னணி இளம் ஹீரோக்கள் உடன் இணைந்து நடிப்பது கமலுக்கு புதிய விஷயமில்லை. பிரபுதேவா நம்பர் ஒன்னாக இருந்தபோது அவரை இணைத்துக் கொண்டு காதலா காதலா படத்தில் நடித்தார் கமல். மாதவன் பிசி நடிகராக இருந்தபோது அன்பே சிவம் படத்தில் நடித்தார். பின்னர் மன்மதன் அம்பு படத்திலும் இணைந்தார். அப்பாஸ் பிசியாக இருந்த காலத்தில் பம்மல் கே சம்மந்தம் படத்தில் நடித்தார்.

இப்படி பல ஹீரோக்களுடன் கடந்த காலங்களில் இணைந்து நடித்த கமல் விரைவில் அஜித் உடன் இணைந்து நடித்தாலும் ஆச்சர்யமில்லை. அதற்கான சூழல் தற்போது உருவாகி உள்ளது. பல வருடங்களாக தன்னிடம் பி.ஆர்.ஓ.வாக இருந்தவரை கடந்த டிசம்பர் மாதம் நீக்கினார் கமல். அதன் பிறகு தனக்கு பி.ஆர்.ஓ.வை நியமிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் அஜித்தின் மானேஜரை தன்னுடைய பி.ஆர்.ஓ.வாக நியமித்துள்ளார் கமல். இது ஒரு நல்ல துவக்கமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அஜித் உடன் கமல் இணையும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. தற்போது மல்டி ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் அதிகளவில் வரவேற்பு பெறுவதுடன் ஹிட்டும் ஆகிவருகின்றன. அஜித்திற்கும் இந்த மல்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் நன்றாக ஒர்க்காகும் என்பதால் கமலும், அஜித்தும் இணைந்து படம் பண்ணுவார்கள் என்று தகவல் வௌியாகியுள்ளது. அப்படி கமலும் அஜித்தும் இணையும் படம் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பது சந்தேகமேயில்லை.

 

Comments

comments