rajiikanth-amitabh

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0 படத்தில் ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷயகுமார் வில்லனாக நடித்து வரும் நிலையில் தற்போது புதியதாக அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தற்போது டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் ‘2.0 படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், இந்த படப்பிடிப்பில் சென்னை மற்றும் மும்பை கால்பந்து அணிகளுக்கு இடையே ஒரு போட்டி நடைபெறுவது போன்ற காட்சியின் படப்பிடிப்பை ஷங்கர் இயக்கி வருவதாகவும், இந்த இரண்டு அணியின் ஓனர்களாக சிறப்பு தோற்றத்தில் அமிதாப் மற்றும் அபிஷேக் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்தா கானூன், ஹம் உள்பட ஒருசில படங்களில் ரஜினி-அமிதாப் இருவரும் ஏற்கனவே நடித்திருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments