PluzMedia.com

பண்பலை வானொலியில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவானவர் மிர்ச்சி சிவா. இவர் நடிகராக அறிமுகமானபோது சென்னை-28, தமிழ்ப்படம் என வெற்றிப்படங்களில் நடித்தார். தனி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததும் அவர் நடித்த படங்கள் எதுவும் எடுபடவில்லை. தில்லுமுல்லு, 144, மசாலா படம், யா யா, வணக்கம் சென்னை என வரிசையாக மிர்ச்சி சிவாவின் படங்கள் தோல்வியடைந்த நிலையில் நடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு டைரக்ட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், ‘லிங்கா’ விநியோகஸ்தரான சிங்காரவேலன், அட்ரா மச்சான் விசிலு என்ற படத்திற்கு மிர்ச்சி சிவாவை கமிட் பண்ணினார். இன்னொரு ஹீரோவாக பவர்ஸ்டார் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. டப்பிங் பணிகள் தொடங்கிய நிலையில், மிர்ச்சி சிவா டப்பிங் பேச வர மறுத்துவிட்டாராம். என்ன காரணம்?

அட்ரா மச்சான் விசிலு படத்தில் நடிக்க அவருக்கு 50 லட்சம் பேசப்பட்டு, 35 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது. மீதி 15 லட்சத்தையும் கொடுத்தால்தான் டப்பிங் பேச வருவேன் என்கிறாராம் மிர்ச்சி சிவா. அப்படத்தின் தயாரிப்பாளர் சிங்காரவேலனோ முதலில் டப்பிங் பேசி முடியுங்கள், பிறகு படத்தை பிசினஸ் செய்துவிட்டு சம்பள பாக்கியை தருவதாக சொல்கிறாராம். இந்த பிரச்சனை காரணமாக அட்ரா மச்சான் விசிலு பட வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளனவாம்.

 

Comments

comments