NTLRG_160308182639000000

காஞ்சனா, காஞ்சனா-2 படங்களின் அடுத்தடுத்த வெற்றி காரணமாக ராகவா லாரன்ஸின் மார்க்கெட் கிடுகிடுவென்று உயர்ந்து நிற்கிறது. இந்நிலையில், தற்போது தெலுங்கு பட்டாஸ் படத்தின் ரீமேக்கான மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்காக ஆந்திரா ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முகாமிட்டு சில மாதங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இப்படத்தில் அவருடன் நிக்கி கல்ராணி, கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், மார்ச் 10-ந்தேதி பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார் லாரன்ஸ். ஸ்ரீராகவேந்திர சாமிகளின் தீவிர பக்தர் என்பதால் அவரது பிறந்த நாளான மார்ச் 10-ந்தேதி மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ராகவா லாரன்ஸ், அதையடுத்து டீசர், இசை வெளியீடு என அடுத்தடுத்து அப்படம் குறித்த ஒவ்வொரு விசயங்களையும் வெளியிடுகிறாராம்.

 

Comments

comments