NTLRG_160313100551000000

தெனாலிராமன், எலி படங்களில் நடித்து வந்தபோது, இப்போதைக்கு ஹீரோவாக நடித்தபோதும், அடுத்தபடியாக காமெடி வேடங்களிலும் அவ்வப்போது நடிப் பேன் என்றுதான் சொன்னார் வடிவேலு. ஆனால், அதையடுத்து விஜய்யின் தெறி உள்பட பல படங்களில் அவரை காமெடியனாக நடிக்க அழைத்தபோது, அந்த படங்களை அவர் ஏற்கவில்லை. நெருக்கடி கொடுத்தபோது, தனது சம்பளத்தை அந்த படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் அளவுக்கு கேட்டு, அதிர்ச்சி கொடுத்தார். இதனால், வடிவேலுவைத் தேடிச்சென்ற பல படங்கள் பின்வாங்கின.

அந்த வகையில், தெறியில் வடிவேலுவுக்கான வேடத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் நடித்துள்ளார். அதேபோல், பிரபு முக்கிய வேடத்தில் நடித்து வரும் மண்பானையும் மீன்குழம்பும் படத்திலும் வடிவேலுவுக்கு ஒரு காமெடி வேடம் இருந்ததாம். ஆனால் அந்த வேடத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, காமெடி வேடத்தில் நடிக்கிற ஐடியா இல்லை என்று கூறி விட்டாராம். அதனால் இப்போது அவர் நடிக்க வேண்டிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்துக்கொண்டிருக்கிறார். மலேசியாவில் தமிழ்நாட்டு ஹோட்டல் நடத்தும் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயராமின் மகன் காளிதாஸ், ஆஷ்னாசவேரி ஆகியோர் ஜோடி சேர்ந்துள்ளனர்.

 

Comments

comments