Idhu-Namma-Aalu-

‘பீப் அரசன்’ சிம்பு நடித்த இது நம்ம ஆளு படம் வருடக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது.

அந்தப்படத்தை எப்படியாவது திரைக்குக் கொண்டு வர வேண்டும் என் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ்.

அவரது முயற்சியிலேயே தேனாண்டாள் பிலிம்ஸ் இது நம்ம ஆளு படத்தை வாங்க முன் வந்தது.

தேனாண்டாள் பிலிம்ஸ் ஒரு படத்தை வாங்கிவிட்டால் மிக அழகாக திட்டமிட்டு அந்தப் படத்தை திரைக்குக் கொண்டு வரும்.

அந்தத் திட்டமிடலே பாதிய வெற்றியைத் தேடிக் கொடுத்துவிடும்.

இது நம்ம ஆளு பட விஷயத்திலோ தேனாண்டாள் பிலிம்ஸின் வெற்றி ஃபர்ர்முலா கூட செல்லுபடியாகவில்லை.

காரணம்… குழப்பவாதியான டி.ராஜேந்தர் தினமும் ஏதாவது ஒன்றைச் சொல்லி இது நம்ம ஆளு படத்தின் வெளியீட்டுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் என் தகவல் அடிபடுகிறது.

அதுமட்டுமல்ல தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் போட்ட ஒப்பந்தத்துக்கு மாறாக பேசிய தொகையைவிட கூடுதல் பணம் கேட்டும் பிரச்சனை செய்கிறாராம்.

அதனால் இது நம்ம ஆளு படத்தை வெளியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது.

லேட்டஸ்ட் தகவலின்படி ஏப்ரல் மாதம் இது நம்ம ஆளு படத்தை வெளியிட தீர்மானித்துள்ளது தேனாண்டாள் பிலிம்ஸ்.

அதற்குள் டி.ராஜேந்தர் இன்னும் என்னவெல்லாம் குட்டையைக்குழப்பப்போகிறாரோ…. தெரியவில்லை.

ஏய்… டண்டனக்கா…. ஏய்… டணக்கு னக்கா….

Comments

comments