_cf875a3e-89e5-11e5-8873-614af01f27d5

தற்போது டெல்லி விளையாட்டு மைதானத்தில் 2.ஒ திரைப்படத்திற்கான முக்கிய காட்சி ஒன்று படமாக்க பட்டு வருகிது. இதில் அக்க்ஷய் குமார் சம்மந்தபட்ட சீன்களை இப்போது ஷங்கர் எடுத்து  வருகிறார். கடும் கண்காணிப்பில் நடுக்கும் இந்த படப்பிடிப்பில் செல் போன் கூட அனுமதிக்காமல் ஷங்கர், அக்ஷய் குமார் கெட்-அப்’ஐ ரகசியமாக வைத்தார். எனினும் இன்று அக்ஷய் குமாரின் மிரட்டலான கெட்-அப் ஒன்று வெளிவந்து சமூக வலைதளங்களில் கலக்கி கொண்டு இருக்கிறது. அதில் அக்ஷய் குமார் கொடூர வில்லன் கெட்-அப்’ஐ வைத்து ரசிகர்கள் பல யூகங்களை வகுதள்ளனர். அக்ஷயின் பல கெட்-அப்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். வரும் 29 ஆம் தேதி முதல் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்வார். பின்பு ரஜினி மற்றும் சிட்டி சமந்தபட்ட காட்சிகள் படமாக்க பட உள்ளன. சுமார் 25 நாட்களுக்கு இந்த மைதானத்தில் ஷூட்டிங் இருப்பதாக தெரிகிறது .

எமிஜாக்சன், தற்போது 2.ஓ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் எமி நார்மலான கதாநாயகியாக இல்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆக்சன் ரோலில் நடிக்கிறாராம்.

கதைப்படி, டாம்ப் ரைடர் வீடியோ கேமில் வரும் லாரா கிரப்ட் என்கிற கதாபாத்திரத்தை தழுவி இவரது வேடம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். அதோடு, சேஸிங் காட்சிகள் நடித்துள்ள எமிஜாக்சனுக்கு ஒரு சண்டை காட்சியும் உள்ளதாம். அந்த காட்சியில் ஹாலிவுட் பட பாணியில் பறந்து பறந்து சண்டை போடப்போகிறாராம் எமி. இதற்கான ஒத்திகையை ஏற்கனவே நடத்தி விட்ட ஷங்கர், தற்போது டில்லியில் ரஜினி-அக்சய்குமார் சம்பந்தப்பட்ட சண்டை காட்சியை படமாக்கி வருபவர், அதையடுத்து எமி சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சியும் படமாக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும், பத்மவிபூஷன் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கும் ரஜினி, அதற்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கிறார்.

இரு வாரங்களுக்குப் பிறகு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் முக்கிய காட்சிகள் சிலவற்றை படமாக்கவிருக்கிறார் ஷங்கர். இதற்காக ரஜினி, அக்ஷய், எமி ஜாக்ஸன் உள்ளிட்டோர் மொராக்கோ நாட்டுக்குப் பயணமாகிறார்கள்.

இத்தகவலை இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

 

Comments

comments