திரையுலகில், அஜித்துக்கு எதிரான அலை…
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பாண்டவர் அணியினர் பதவி ஏற்றதிலிருந்து பரபரப்பாக இருக்கிறார்கள்.
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் பிரம்மாண்டமாக சங்கக் கட்டிடத்தை கட்டியே தீருவது என்பதில் உறுதியாக உள்ளனர்.
அதை நோக்கிய முயற்சியிலும் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.
இதற்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்துகிறார்கள்.
ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவிருக்கிறது.
இந்தப்போட்டியில் ரஜினி, கமல் உட்பட அத்தனை நடிகர், நடிகைகள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
காலையில் துவங்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி இரவு வரை நடக்க உள்ளது.
போட்டி முடிந்ததும் அங்கு அமைக்கப்பட உள்ள மேடையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்களாம்.
இந்த நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.
இருவருமே வருவதாக உறுதியளித்துள்ளனர்.
இதே தகவலை அஜித்துக்கும் அனுப்பியுள்ளனர்.
அஜித்தோ நான் நிச்சயமாக வர மாட்டேன்… தேவைப்பட்டால் சில லட்சங்கள் நன்கொடை தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அஜித்தின் இந்த பதில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாம்.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டால் தெருவில் இறங்கி மக்களிடம் உண்டியல் குலுக்கி பணம் கேட்போம். ஆனால் அஜித்திடமிருந்து சல்லிக்காசு வாங்கக் கூடாது என்று சில இளம் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
அது மட்டுமல்ல, எதிர்காலத்தில் அஜித் தொடர்பான எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் நடிகர் சங்கம் அவருக்கு சப்போர்ட் பண்ணக் கூடாது என்றும் சிலர் ஆவேசப்பட்டிருக்கிறார்கள்.
மொத்ததில் அஜித்துக்கு எதிரான அலை திரையுலகில் பரவத்தொடங்கி உள்ளது.