தயாராகிறது… ஒரு தோல்விப்படத்தின் இரண்டாம் பாகம்..
வெற்றியடைந்த படங்களின் இரண்டாம் பாகம் தயாராவதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
தோல்வியடைந்த ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள் என்றால்?
உண்மையில் அந்தத் தயாரிப்பாளருக்கு செம கெத்துதான் என்கிறீர்களா?
ராஜதந்திரம் படத்தின் தயாரிப்பாளர் செந்தில் வீராசாமிதான் அவர்….
ஆமா… ராஜதந்திரம்னு எப்ப படம் ரிலீஸ் ஆச்சுன்னு கேட்கிறீர்களா?
நியாயமான கேள்விதான்… கடந்த வருடம் மார்ச் 13 ஆம் தேதி வெளியாகி, காலண்டரை கிழிப்பதற்குள் தியேட்டரிலிருந்து தூக்கப்பட்ட படம்.
நடுநிசி நாய்கள் படத்தில் நடித்த வீரா, ரெஜினா, சிவா, அஜய் பிரசாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் அமித் என்பவர் இயக்கிய இந்தப் படம் வசூல் ரீதியில் கல்லாப்பெட்டியை நிரப்பவில்லை.
ஆனால் பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்த தைரியத்தில்தான் இப்போது ராஜதந்திரம் படத்தின் பார்ட்- 2 எடுக்கிறார்கள்.
தயாரிப்பாளர் செந்தில் வீராசாமியே இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார்.
ராஜதந்திரம் படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களோடு ‘ராஜதந்திரம் 2’வில் சில முன்னணி நடிகர்களையும் நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதம் முதல் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
படப்பிடிப்பு ஜூன் மாதம் என்றாலும், அதற்கு முன்னதாக மார்ச் 13 ஆம் தேதி அன்று (‘ராஜதந்திரம்’ படம் வெளியான நாள்) ‘ராஜதந்திரம் 2’ படத்தின் புரமோஷனுக்காக அப்படத்தின் முதல் 6 நிமிடம் இடம்பெறும் காட்சிகளை வெளியிட உள்ளனர்.
வாரந்தோறும் பல படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒருசில படங்களே வெற்றியடைகின்றன. 90 சதவிகித படங்கள் தோல்வியடைகின்றன.
எனினும் ஒரு சில படங்களின் தோல்வி அதிர்ச்சியாக இருக்கும்.
‘ராஜதந்திரம்’ படத்தின் தோல்வி இந்த ரகம்.
ராஜ தந்திரம்-2 படத்தை ரசிகர்கள் வரவேற்பார்கள் என்று நம்புவோம்.
ராஜதந்திரம் வெற்றிப்படம்
ராஜதந்திரம் தோல்விப்படம்?? enru ezutha umaku eppdi ezutha thonthu … i like the way the twitted different artist characters
ராஜ தந்திரம்-2 vettri adaya vazuthukal