_cf875a3e-89e5-11e5-8873-614af01f27d5

சாதி, மத பேதமில்லாமல் எல்லோரும் சமத்துவமாக வரும் ஒரே இடம் தியேட்டர் தான். பொழுதுபோக்கு தான் எல்லோரையும் ஒன்றிணைக்கிறது. ஆனால் அந்த

சினிமாவிலேயே சாதியை வளர்க்கும் விதமான படங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் ஒரு படம் வந்தது. இதில், ஒரு சாதியை தூக்கோ தூக்கென்று தூக்கி பிடித்திருந்தார்கள். படம் ரிலீஸான பிறகு படத்தின் இயக்குனரே தன் ‘குரூப்’களுக்கு நேரடியாக வாட்ஸ் அப்பில் ஒரு வேண்டுகோள் வைத்தார். அதில் ”நம் சாதி பெருமையை பேசுவதற்காக தான் இந்த படத்தையே எடுத்தேன்” என்று பெருமை வேறு. அடுத்தது ஓயாத அலைகள் படத்தின் நாயகனின் வாரிசு நடிக்கும் படத்தின் பெயரே ஒரு பெரும் தலைவரின் பெயர்.

ஒரு நிகழ்ச்சியில் குஷ்பு ”எங்களுக்குள் சாதியே இல்லை” என்று பெருமிதப்பட அடுத்து மைக் பிடித்த சிங்கப்பூர்வாசி வடிவழகன் “குஷ்பு மேடம் சொன்னாங்க, தமிழ் சினிமாவில் சாதி இல்லைனு. உண்மையிலேயே எங்களுக்கெல்லாம் சாதி என்றால் என்னானு தெரியாது. ஆனால், தமிழ்ச் சமூகத்தில் எத்தனை சாதிகள் இருக்கிறது என்பதை நாங்கள் தமிழ் சினிமாவைப் பார்த்துதான் தெரிந்து கொண்டோம்.”என்று சொல்லி முடிக்க கரகோஷம் அரங்கக் கூரையைப் பிளந்தது. அப்போது மேடையில் இருந்த இயக்குனர் இமயத்தின் முகத்தில் ஈயாடவில்லை.

ஆனால் அவர் சொன்னது தான் உண்மை என்பதை சினிமாக்காரர்கள் உணர்வார்களா?

 

Comments

comments