_cf875a3e-89e5-11e5-8873-614af01f27d5

ட்விட்டரின் சின்னம் குருவி என்றாலும், அங்கே காசு வாங்கிக் கொண்டு கத்துகிற காக்கைகளின் கூட்டம்தான் அதிகமாக உள்ளது.

ட்விட்டரில் யார் என்ன பதிவைப்போட்டாலும் அதை ரீட்வீட் என்ற பெயரில் வாந்தி எடுப்பது.

அல்லது யாரோ போட்ட பதிவுகளை காப்பி பண்ணி தன்னுடைய பதிவைப்போல் பேஸ்ட் செய்வதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இப்படிப்பட்டவர்கள் யார் இவர்களின் பின்னணி என்ன என்பதை அறியாமலே பல பேர் இவர்களை ஃபாலோ செய்வது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தங்களுக்கு நிறைய ஃபாலோயர்கள் இருப்பதை மூலதனமாகக் கொண்டு சினிமாவில் உள்ளவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளனர் இந்த ட்விட்டர் காக்கைகள்.

இப்படிப்பட்டவர்களின் சுயரூபம் தெரியாமல் அவர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து வருகின்றனர் படத்துறையினர்.

இப்படி ஏமாறும் பட அதிபர்களில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவும் ஒருவர்.

சூர்யா தயாரித்து நடிக்கும் 24 படத்தின் வியாபார விஷயங்களை ஞானவேல்ராஜாதான் கவனித்து வருகிறார்.

சமீபத்தில் 24 படத்தின் புரொமோஷன் பணிகளை தொடங்கிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா செய்த முதல் வேலை என்ன தெரியுமா?

பணம் வாங்கிக் கொண்டு ட்விட்டர்களில் ஆகோ ஓகோவென கருத்துக்களை வெளியிடும் ட்விட்டர் காக்கைகள் சிலரை தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்துள்ளார்.

24 டீசர் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்னதாகவே ட்விட்டர் காக்கைகளுக்கு 24 படத்தின் டீசரைப்போட்டுக்காட்டிய ஞானவேல்ராஜா , அதைப் பற்றி ட்விட்டரில் ஆகா ஓகோவென புகழ்ந்து ட்வீட் போடும்படி பெரும் தொகையைக் கொடுத்துள்ளார்.

ஞானவேல்ராஜாவிடம் வாங்கிய காசுக்கு விசுவாசமாக ட்விட்டரில் ‘காக்கைகள்’ கத்த ஆரம்பித்துள்ளன.

24 படத்தின் டீசருக்கு இப்படி எல்லாம் செயற்கையாக பில்ட் கொடுத்தும் ஒரு நன்மையும் விளையவில்லை என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.

சமீபத்தில் யூடியூபில் சாதனை படைத்தது விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் டீசர்தான்.

கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தெறி டீசர் வெளியானது.

வெளியான முதல் 5 நிமிடத்தில் 25 ஆயிரம் லைக்ஸ் பெற்றது

15 நிமிடத்தில் 50 ஆயிரம் லைக்ஸ், 75 நிமிடத்தில் 75 ஆயிரம் லைக்ஸ், 6 மணி நேரத்தில் 1 லட்சம் லைக்ஸ், 50 மணி நேரத்தில் 2 லட்சம் லைக்ஸ் என சாதனை படைத்துக் கொண்டே இருந்தது.

அதற்கு முந்தைய டீசர்களின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது – தெறி டீசர்.

அதுமட்டுமல்ல, சுமார் 30 மணி நேரத்திற்குள் 30 லட்சம் பார்வையாளர்களை பெற்றும் சாதனை படைத்தது.

தெறியின் சாதனையோடு ஒப்பிடும்போது நேற்று வெளியான 24 படத்தின் டீசர் ஒன்றுமே இல்லை என்பதே உண்மை.

24 படத்தின் டீசர் வெளியாகி ஏறக்குறைய 20 மணி நேரம் கடந்தநிலையில்.. இதுவரை சுமார் எட்டு லட்சத்து பனிரெண்டாயிரம் பேர் மட்டுமே 24 படத்தின் டீசரை பார்த்துள்ளனர்.

இவர்களில் 24 படத்தின் டீசரை லைக் பண்ணியது வெறும் சுமார் 51 ஆயிரம் பேர் மட்டுமே.

தமிழ் டீசரைவிட, 24 படத்தின் தெலுங்கு டீசருக்கு வரவேற்பு இன்னும் மோசம்.

சுமார் ஒரு லட்சத்து நாற்பது ஆயிரம் பேர் மட்டுமே 24 தெலுங்கு டீசரை பார்த்துள்ளனர். அவர்களில் 5094 பேர் மட்டுமே லைக் பண்ணி இருக்கின்றன

ட்விட்டர் காக்கைகள் கத்தியும் 24 டீசரின் ஹிட்ஸ் எகிறவில்லையே?

ஞானவேல்ராஜா போன்ற தயாரிப்பாளர்கள் யோசிக்க வேண்டிய விஷயம் இது.

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆக முடியாது.

அதாவது என்னதான் கத்தினாலும் ட்விட்டர் காக்கைகள் மீடியா ஆக முடியாது.

Comments

comments