0 (1)

‘தெறி’ படத்தின் மொத்த பாடல்களும் இன்று மாலை சென்னையில் நடைபெற உள்ள இசை விழாவில் வெளியிடப்பட உள்ளது. ஆனால், அதற்கு முன்னர் இன்று 20ம் தேதி பிறந்த 12 மணிக்கு ‘ஜித்து ஜில்லாடி….’ சிங்கிள் பாடலை யு டியூபில் வெளியிட்டனர். இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை வென்றதைக் கொண்டாடும் விதத்தில் இந்தப் பாடல் வெளியிடப்படுகிறது என படத்தின் இயக்குனர் அட்லீ தெரிவித்திருந்தார்.

‘ஜித்து ஜில்லாடி…’ எந்த ஒரு தனிச் சிறப்பும் இல்லாத ஒரு சாதாரணப் பாடலாக இருப்பதைக் கண்டு விஜய் ரசிர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ‘வேதாளம்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆளுமா டோலுமா’ அளவிற்கு இந்த ‘ஜித்து ஜில்லாடி’ பாடலும் வரவேண்டும் என ஜி.வி.பிரகாஷ் நினைத்திருந்தார் போலும். அதனால்தான் அந்தப் பாடலை எழுதிய ரோகேஷ்-ஐயே இந்தப் பாடலையும் எழுத வைத்தார். தேவா மற்றும் பாலசந்திரன் குரலில் இந்த ‘ஜித்து ஜில்லாடி…’ பாடல் ரசிகர்களைக் கவரத் தவறிவிட்டது.

தன்னுடைய 50வது படம் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் ஜி.வி.பிரகாஷ் மீதி பாடல்களுக்காவது ஒழுங்காக இசையமைத்திருப்பாரா என்று விஜய் ரசிகர்களே இப்போதே சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டனர்.

Comments

comments