0 (1)

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா மற்றும் பலர் நடிக்க விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதக் கடைசியில் சென்னையில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கான கூட்டணியில் கௌதம் மேனன், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இணைந்திருப்பது திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

செல்வராகவன் இயக்கும் படமாயிற்றே எப்போது முடிப்பாரோ என்று வியப்புடன் கேள்வி கேட்ட கோலிவுட் புள்ளிகளுக்கு பதிலளிக்கும் விதமாக படத்தை விரைவில் முடிக்க இருக்கிறார்களாம். இந்தப் படத்தில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் நாயகிகளில் ஒருவரான ரெஜினா ஒரு நாயகியாகவும், ‘அட்டகத்தி’ நந்திதா மற்றொரு நாயகியாகவும் நடிக்கிறார்கள். படத்தில் இருவருக்குமே ஆக்ஷன் காட்சிகள் உள்ளதாம். அதற்காக இருவருக்கும் சிறப்பு சண்டைப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாம். கிளைமாக்ஸ் காட்சியில் அவர்கள் இருவரின் சண்டைதான் படத்தின் ஹைலைட்டாகவும் இருக்கம் என்கிறார்கள். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments