_cf875a3e-89e5-11e5-8873-614af01f27d5

நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் இன்று கூடுகிறது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடக்க உள்ள இந்த கூட்டத்தில், சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து விவாதிக்கப்படும் எனவும், அவர்கள் மீது எடுக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் சங்க பொதுச்செயலாளரான நடிகர் விஷால் இதனை மறுத்துள்ளார்.

பொதுக்கூட்டத்தில் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து பேசப்படுமா என விஷாலிடம் கேட்டதற்கு, சரத்குமார் மீது நடவடிக்கை எடுப்பது முக்கியமல்ல. சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நலத்திட்டங்கள் தான் முக்கியம். அது பற்றி தான் பொதுக் கூட்டத்தில் பேச உள்ளோம். பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராதாரவியிடம் நானே போனில் பேசி, கூட்டத்திற்கு அழைத்தேன். அதனால் பொதுக் கூட்டத்திற்கு எல்லோரும் வருவார்கள் என பதிலளித்தார்.

Comments

comments