0 (1)

ரஜினி நடித்த சந்திரமுகி படத்தை சூப்பர் ஹிட்டாக கொடுத்த பி.வாசு, அதையடுத்து ரஜினியை வைத்து இயக்கிய குசேலன் படம் படுதோல்வியாக அமைந்தது. அதனால் பின்னர் தெலுங்கு, கன்னடத்தில் படம் இயக்கி வந்தார். மேலும், மலையாள த்ரிஷ்யம் படத்தை ரவிச்சந்திரன், நவ்யா நாயரை வைத்து கன்னடத்தில் ரீமேக் செய்த அவர், சிவராஜ்குமார்-வேதிகாவை வைத்து சிவலிங்கா என்ற படத்தையும் இயக்கினார். அப்படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத் துள்ளது.

அதனால், சிவலிங்கா படத்தை அடுத்தபடியாக தமிழில் ரீமேக் செய்கிறாராம் பி.வாசு. ஆனால் கன்னடத்தைவிட தமிழில் இன்னும் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டிருக்கும் அவர், அப்படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ், அனுஷ்கா ஆகியோரிடம் கால்சீட் கேட்டுள்ளாராம். கன்னடத்தில் ஹிட்டான படம் என்பதால் அவர்களது கால்சீட் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இல்லையாம். மேலும், அந்த படத்தை தமிழில் சந்திரமுகி-2 என்ற பெயரில் இயக்கப்போகிறாராம் பி.வாசு.

 

Comments

comments