_cf875a3e-89e5-11e5-8873-614af01f27d5

தமிழ்சினிமாவில் சந்தானம் நம்பர் ஒன் காமெடியனாக இருந்தாலும், கதாநாயகன் பட்டியலில் அவருக்கு கடைசி இடம்தான்.

போனால் போகிறது என்று பிரசாந்துக்கு முந்தைய இடத்தைக் கொடுக்கலாம் என்பதே யதார்த்த நிலை.

காமெடியன் சந்தானத்தை கையெடுத்து கும்பிடும் தியேட்டர்காரர்கள் ஹீரோ சந்தானத்தை சட்டைப் பண்ணுவதில்லை.

அதனால், கோபி காந்த் போன்றதொரு புதுமுக ஹீரோ நடித்த படத்துக்கு தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் என்ன மரியாதை கொடுப்பார்களோ.. அவ்வளவு மரியாதைதான் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களுக்கும் கிடைக்கிறது.

இப்படி நாம் சொல்வது பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

ஆனால் உண்மை இதுதான்.

சந்தானம் ஹீரோவாக நடித்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டது.

எனவே அந்தப் படம் ஓரளவு ஓடியது.

அதன் பிறகு அவர் தனி கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் ஆகிய இரண்டு படங்களும் ஒன்றரை ஓடவில்லை.

எனவே சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களுக்கு தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் வரவற்பு இல்லை.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் இணைந்து நடித்த சந்தானம், சேது, விஷாகா சிங் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் ‘வாலிபராஜா’.

ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்தின் சிஷ்யர் சாய் கோகுல் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இது சைக்கோ காமெடி படமாம்!

‘வாங்ஸ் விஷன்’ எனும் நிறுவனம் சார்பில் எச்.முரளி தயாரித்திருக்கும் வாலிப ராஜா படத்துக்கு பலமுறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் குறித்தநாட்களில் படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், இம்மாதம் 25ஆம் தேதி அன்று வாலிப ராஜா படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

இந்தமுறையும் வாலிபராஜா படம் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்றே விநியோகஸ்தர்கள் சொல்கிறார்கள்.

Comments

comments