0 (1)

அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை ஏப்ரலில் அதிகாரபூர்வமாக வெளியிட இருக்கிறார்கள் என்ற தகவல் அடிபட்டு வருகிறது.

அதற்கு முன்னதாக அஜித்தின் படம் பற்றிய தகவல் அதாவது அஜித் நடிக்கும் புதிய படத்தை  சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்தி வெளியாகிவிட்டது.

இந்த செய்தியை முன்னணி ஊடகங்களுக்குக் கொடுத்ததே அஜித் தரப்புதான்  என்று சொல்லப்படுகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிக்க இருப்பது திரையுலகத்தைப் பொருத்தவரை பழைய செய்திதான்.

ஒருவேளை.. ரசிகர்களுக்கு வேண்டுமானால் புதிய செய்தியாக இருக்கலாம்.

எத்தனையோ முன்னணி நிறுவனங்கள் இருக்க, சத்யஜோதி நிறுவனத்தை அஜித் ஓகே பண்ணியதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா?

அங்கு பணபரிவர்த்தனைகள் அனைத்தும் காசோலை வழியாகவே நடக்கும்.

அதாவது கருப்புப் பணத்துக்கு அங்கு வேலையே இருக்காது.

நடிகர்களின் சம்பளம் தொடங்கி ஆபிஸ்பாய் சம்பளம் வரை அனைத்தையும் ஒளிவுமறைவில்லாமல் கணக்கில் காட்டுவதுதான் சத்யஜோதி ஸ்டைல்.

அஜித்தும் இப்படிப்பட்டவர்தான்.

தான் வாங்கும் இருபது கோடி சம்பளம் மொத்தத்தையும் கணக்கில் காட்டிவிடுவார்.  மற்ற ஹீரோக்களைப்போல் ஒரு பைசா கூட கணக்கில் காட்டாத கருப்புப்பணமாக வாங்க மாட்டார்.

வாங்கிய சம்பளத்துக்கு முறையாக வருமான வரியையும் செலுத்திவிடுவார்.

ஆனால் தான் வாங்கிய சம்பளத்துக்கான வரியை தயாரிப்பாளர்கள் தலையில் கட்டிவிடுவார் என்ற குற்றச்சாட்டு அஜித் மீது இருக்கிறது.

இது எந்தளவுக்கு உண்மையோ, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தை அஜித் ஓகே பண்ணியதற்கு  அங்கு நடக்கும் வெளிப்படையான பண பரிவர்த்தனையே காரணம் என்று சொல்கிறார்கள்.

தான் கேட்ட சம்பளத்தைக் கொடுக்கும் தயாரிப்பாளர்களையே ஹீரோக்கள் விரும்புவார்கள்.

ஆனால் அஜித்தோ தனக்கு வெள்ளையாக சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளரை விரும்பி இருக்கிறார்.

வெரி குட்.

Comments

comments